மனைவியை மிரட்டியதால் ஐஸ் பேக்டரி ஊழியரைக் கொன்ற கணவன்!
எடப்பாடி: நாமக்கல் மாவட்டத்தில் தன்னுடைய மனைவிக்கு தொந்தரவு அளித்து வந்த ஐஸ் கம்பெனி ஊழியரை வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வாசுகி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கேசவன்.
இவர் தனியார் ஐஸ் கம்பெனியில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார்.
கொடூரமான கொலை:
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை தொடர்பாக சங்ககிரி பகுதிக்கு வந்த அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தேடுதலில் கேசவன் சங்ககரி ஆவரங்கம்பாளையம் இடையப்பட்டி ரெயில்வே தண்டவாளத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் அவரது குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வந்தனர்.
தீவிர விசாரணையில் போலீஸ்:
சம்பவ இடத்துக்கு சேலம் மாவட்ட போலீசார் கேசவனின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
5 வருடத்திற்கு முன் காதல்:
இந்நிலையில் விசாரணையில் கேசவனின் பெற்றோர் சில விவரங்களைத் தெரிவித்தனர். அதன்படி, கேசவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிமேகலை என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். அப்போது மணிமேகலைக்கு 18 வயது ஆகாததால் பிரித்து விட்டனர்.
வேறொரு திருமணம்:
இந்த நிலையில் மணிமேகலையை ஈரோடு நாராயணன் வலசு பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். அவர்களுக்கு தற்போது 2½ வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும் தெரிவித்தனர்.
வாழப் பிடிக்காத மணிமேகலை:
மேலும் மணிமேகலை கடந்த 3 மாதமாக கேசவனை தொடர்பு கொண்டு, நான் உன்னோடு வந்து விடுகிறேன். எனக்கு இங்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் பிரச்சினை ஏற்பட்டது.
கேசவனை மிரட்டிய ரவி:
இதையடுத்து இருதரப்பினரும் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தோம். போலீசார் எங்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது ரவி, எங்களது மகனை பார்த்து இன்னும் ஒரு மாதத்தில் உன்னை தீர்த்து கட்டாமல் விடமாட்டேன் என்று கூறி சென்றார். அதன்பின்னர்தான் கேசவனைக் காணவில்லை என்று கூறினர்.
கொலை செய்த கணவன்:
இதனையடுத்த விசாரணையில் கேசவன், மணிமேகலைக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்ததால் ரவிதான் அவரைக் கொலை செய்துள்ளார் என்ற உண்மை தெரியவந்தது. இதனையடுத்து ரவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications