ஆள் மாற்றி மற்றொருவரை கத்தியால் குத்திக் கொன்ற கொலையாளி- திருப்பூர் ஜவுளிக்கடையில் விபரீதம்!
திருப்பூர்: திருப்பூரில் ஜவுளிக்கடை ஒன்றில் ஆள் மாற்றி மற்றொருவரைக் குத்திக் கொன்ற கொலையாளியை போலீசார் தீவிரவாக தேடி வருகின்றனர்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு திருநீலகண்டபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியின் மகன் சந்தோஷ்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகபிரியன். இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பகுதியில் கடை வைத்து, உள்ளூரில் உள்ள இரண்டாம் ரக பனியன் துணிகளை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு, இவருடைய கடைக்கு கன்னியாகுமரி சிலுவை நகரை சேர்ந்த மரியஜானின் மகன் பாபு (வயது-36) என்பவர் மொத்தமாக துணி ரோல்களை வாங்குவதற்காக வந்துள்ளார். கடையில் இருந்த பாபு துணி ரோல்களை எடுதுக் காட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமி ஒருவன் கடைக்கு வந்துள்ளார். கடையில் சந்தோஷ்குமாரும், பாபுவும் இருந்துள்ளனர். அந்த நேரம் சண்முகப்பிரியன் கழிப்பிடத்துக்கு சென்று விட்டார். கடைக்குள் நுழைந்த ஆசாமி "சந்தோஷ் கடை இதுதானே" என்று கேட்டுள்ளார். சந்தோஷ்குமாரும் ஆமாம் என்று கூறியுள்ளார்.
உடனே அந்த ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு சந்தோஷ்குமாரை குத்த பாய்ந்துள்ளார். சந்தோஷ்குமார் தடுத்தபோது அவருடைய 2 கைகளிலும் கத்திக்குத்து விழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாபு மர்ம ஆசாமியை தடுத்துள்ளார். அப்போது அந்த ஆசாமி பாபுவின் நெஞ்சுப்பகுதியில் குத்தினான். சத்தம் கேட்டு சண்முகப்பிரியன் கடைக்குள் ஓடி வந்துள்ளார். அதற்குள் அந்த ஆசாமி மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டான்.
நெஞ்சில் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டதில் பாபு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் திஷா மிட்டல், உதவி கமிஷனர் தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் சந்தோஷ்குமாரையும், சண்முகப்பிரியனையும் கொலை செய்யும் நோக்கத்தில் அந்த ஆசாமி வந்ததும், அப்போது அங்கிருந்த பாபுவை, சண்முகப்பிரியன் என்று நினைத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications