சென்னை: சிமெண்ட் பலகையால் தெரு நாயை அடித்துக் கொன்றவர் மீது போலீசில் புகார்
சென்னை: வீட்டில் வளர்த்த பறவையின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட ஆத்திரத்தில் சிமெண்ட் பலகையால் தெருநாயை அடித்துக் கொன்றவர் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று காலை சென்னை கங்கை அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கையில் சிமெண்ட் பலகையை எடுத்துக் கொண்டு சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். நேராக தெருநாய் ஒன்றின் அருகில் சென்ற பாஸ்கர் யாரும் எதிர்பாராத நேரத்தில் பலகையை நாய் மீது போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த நாய் பலியானது.
இக்காட்சிகளை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியை கையில் எடுத்த பாஸ்கர் வேறு ஏதாவது நாய் அல்லது பூனை கிடைக்கிறதா எனத் தேடியுள்ளார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட அப்பகுதி மக்கள் பாஸ்கரை வளைத்துப் பிடித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பிராணிகள் வதை தடுப்பு குழுவினர் போலீசில் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்கர் வீட்டில் பறவைகள் வளர்த்து வருவதாகவும், கடந்த வாரத்தில் அப்பறவைகள் தாக்கப் பட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், பறவைகளை தெரு நாய் அல்லது பூனை இவற்றில் ஏதாவது கடித்து இருக்கக் கூடும் என கருதிய பாஸ்கர் அந்த கோபத்தில் தான் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், விரைவில் அவரைக் கைது செய்வோம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications