நெல்லை அருகே பயங்கரம்... கொலை செய்த மனைவி உடலுடன் 3 நாட்களாக இருந்த கணவர் கைது
திருநெல்வேலி: நெல்லை அருகே மனைவியை கொலை செய்து விட்டு அந்த உடலுடன் 3 நாட்களாக இருந்த கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே உள்ள பத்தமடை குண்டலகேசி தெருவைச் சேர்ந்தவர் ஆயிரத்தான். இவர் கட்டிட தொழிலாளியாக பணிசெய்து வந்தார். இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு நபர்ணா என்ற மகளும், தருண்ராஜா என்ற மகனும் உள்ளனர்.
ஆயிரத்தான் கடந்த ஒரு ஆண்டாக சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் முத்துமாரி கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 12ந் தேதி மனைவியிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டு ஆயிரத்தான் தகராறு செய்துள்ளார். ஆனால் முத்துமாரி பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆயிரத்தான் அவரது தலையை பிடித்து சுவற்றில் மோதியுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் முத்துமாரி உயிரிழந்தார்.
இதன் பின்னர் முத்துமாரியின் உடலை கட்டிலில் போட்டு விட்டு கடந்த 3 நாட்களாக தனது 2 குழந்தைகளுடன் எதுவும் நடக்காதது போல் ஆயிரத்தான் இருந்துள்ளார். முத்துமாரி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது குழந்தைகளிடம் விசாரித்தனர். விபரம் அறியாத அந்த குழந்தைகள் அம்மா தூங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் நள்ளிரவில் வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டார் பத்தமடை போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சேரன்மகாதேவி டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் எஸ்.ஐ. லோகநாதன் ஆகியோர் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் முத்துமாரி உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதையடுத்து உடலை பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆயிரத்தானை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications