ஹைகோர்ட்டில் டிரைவர், அசிஸ்டெண்ட் வேலை... கோடிக்கணக்கில் பணத்தை இழந்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஹைகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பல கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக வக்கீல் குமாஸ்தா ஒருவர் மீது பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.

நேற்று சென்னை ஹைகோர்ட்டு தலைமை பதிவாளர் அலுவலகத்திற்கு தேனி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிலர் ஒன்று திரண்டு வந்து புகார் ஒன்றை அளித்தனர். அதில், அவர்கள் தங்களுக்கு ஹைகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக வக்கீல் குமாஸ்தா பிரபாகர் சத்தியகுமார் என்பவர் பல லட்சம் வாங்கி மோசடி செயதுள்ளதாக குற்றசாட்டுத் தெரிவித்திருந்தார்கள்.

இதையடுத்து நிர்வாகப்பிரிவு பதிவாளரிடம் புகார் செய்யும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தாங்கள் பல முறை புகார் செய்யும் இதுவரை எந்த நடவடிக்கையையும் ஹைகோர்ட்டு எடுக்கவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.

தாங்கள் ஏமாற்றப் பட்ட விதம் குறித்து தேனியை சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்பவர் கூறியதாவது:-

எம்.பி.ஏ. பட்டதாரியான எனக்கு இளநிலை உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சத்தை ராஜா என்பவர் மூலம் பிரபாகர் சத்தியகுமார் வாங்கினார். கடந்த ஆண்டு ஹைகோர்ட்டுக்கு சான்றிதழ் சரிபார்ப்பதற்காக எங்களை எல்லாம் அழைத்தார். 300-க்கும் மேற்பட்டவர்கள் உண்மை சான்றிதழ்களுடன் ஹைகோர்ட்டுக்கு வந்தோம்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம், எங்களுக்கு பிரபாகர் சத்தியகுமார் பணி நியமன உத்தரவை கொடுத்தார். அவற்றை எடுத்துக்கொண்டு ஹைகோர்ட்டுக்கு வந்தபோது, அவை போலி என்று தெரியவந்தது.

என்னைப்போல், தமிழகம் முழுவதில் இருந்தும் 300-க்கும் மேற்பட்டவர்கள் பணம் கொடுத்து ஏமாந்து உள்ளனர். ஒவ்வொருவரிடமும் ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரை வாங்கி, சுமார் ரூ.5 கோடி வரை மோசடி நடந்துள்ளது.

பிரபாகரன் சத்தியகுமார், ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவரின் மருமகன். இவரது மனைவி, தங்கை ஆகியோர் இந்த ஹைகோர்ட்டில்தான் வேலை செய்கின்றனர்' என்றார்.

ராஜேஷ்கண்ணா போலவே, பிரபாகரிடம் பணத்தை இழந்தவர்கள் ஒவ்வொருவரும் ஹைகோர்ட்டில் ஜூனியர் அசிஸ்டெண்ட், டிரைவர் மற்றும் ஆபிஸ் அசிஸ்டெண்ட் பணிக்காக முயற்சி செய்தவர்கள் தானாம். பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரிடமும் பிரபாகர் கிட்டத்தட்ட ரூ2 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். சிலர் நேரடிப் பணமாகவும், சிலர் காசோலையாகவும் பணத்தை அளித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபாகர் திருவள்ளூர் மாவட்டம் ஒரத்தூரைச் சேர்ந்தவர். பணம் கொடுத்தவர்களை ஏமாற்றுவதற்காக ஒரே பணி நியமன கடிதத்தை தேதி மாற்றி, மாற்றித் தந்துள்ளார் பிரபாகர்.

வேலைக்கான விண்ணப்பத்தை பிரபாகரிடம் வழக்கும்போதே ஒரு லட்சம் ரூபாய் அட்வான்சாகவும், அதனைத் தொடர்ந்து பணி நியமன ஆணை பெற்ற போது மீதமுள்ள இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாயை வழக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஹைகோர்ட் பதிவுத்துறையிடம் கேட்டபோது, எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அவற்றை எல்லாம் ஆய்வு செய்து வருகிறோம். இந்த மோசடி குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+