கர்ப்பமான காதலியுடன் திருமணம்... அதே நாளில் இன்னொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த வாலிபர்!
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே திருமண நாளில் காதலியை கைவிட்டுவிட்டு மற்றொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகள் பிரியங்கா. இவரும், குரால் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
அப்போது பல இடங்களுக்கு காதலியை அழைத்து சென்ற ஜெகதீஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதில் பிரியங்கா கர்ப்பமானார். இதையடுத்து அவர் திருமணத்துக்கு வற்புறுத்திய நிலையில், ஜெகதீஷ் மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்துள்ளார்.
இந்த விவகாரம் பிரியங்கா பெற்றோருக்கு தெரிய வரவே, ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இரு குடும்பத்தாரும் பேசி கடந்த 17 ஆம் தேதி கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் சிவன் கோயிலில் பிரியங்கா - ஜெகதீசுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 17 ஆம் தேதி கோயிலில் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் திரண்டனர். ஆனால் வெகுநேரமாகியும் ஜெகதீஷ் வரவில்லை. விசாரித்த போது அவர் மணிமேகலை என்பவரை திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
இதனால் காதலி் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பிரியங்கா கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, ஜெகதீசை கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications