ஒசூர்-பெங்களூர் நெடுஞ்சாலையில் கிடந்த ஆண் தலை.. விசாரணையில் அவலம் அம்பலம்
ஒசூர்: பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஆண் ஒருவரின் தலை மட்டும் தனியாக கிடந்த சம்பவம் ஒசூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒசூரில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் அருகே, ஒரு ஆணின் தலை மட்டும் தனியாக கிடந்ததை நேற்று மதியம் கண்ட, அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஓசூர் நகர போலீஸார் விரைந்து சென்று அந்த தலையை மீட்டு விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால், விசாரணையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.
ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறை உள்ளது. இந்த அறையில் இறந்து அடையாளம் தெரியாதவர்களின் தலைகள் மட்டும் தனியாக வெட்டி எடுத்து வைக்கப்பட்டிருக்கும்.
இந்த அறைக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் செய்யவில்லை. பெரும்பாலான நேரம் இந்த அறையின் கதவுகள் திறந்தே கிடக்கும் அவலமும் அரங்கேறுமாம்.
அந்த அறையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டிருந்த இறந்தபோன ஒருவரின் தலையை அங்கு சென்ற தெருநாய் ஒன்று, கவ்விக்கொண்டு வெளியே எடுத்து வந்து சாலையில் போட்டுள்ளது என்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து போலீசார், மருத்துவமனையில் உள்ள மனித தலைகள் வைக்கப்பட்டுள்ள அறையை பாதுகாப்பக் வைக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications