இறந்த நாயை ப்ரீசரில் வைத்து, ஊர் கூடி அஞ்சலி! நெல்லை மாவட்டத்தில் வினோதம்
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இறந்து போன வளர்ப்பு நாய் குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (54). சென்னை அசோக்நகரில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, இவருடைய 2வது மகன் இறந்து விட்டதால், மனமுடைந்து போய் சொந்த ஊரில் குடியேறினார்.

சென்னையில் அவர்கள் வளர்த்து வந்த டாமி என்ற செல்ல நாயையும் சொந்த ஊருக்கு அழைத்து வந்து செல்லமாக பார்த்துக்கொண்டார். கல்யாண சுந்தரம் அந்த நாயை தனது மகன் போல நினைத்து பாசம் காட்டியுள்ளார்.
இந்நிலையில், ‘டாமி' கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப் பட்டு வந்தது. குடும்பத்தினர் ‘டாமி'யை, கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
சென்னையில் நடைபெற்ற உறவினர் இல்ல விழாவிற்கு கல்யாணசுந்தரம் சென்றிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி டாமி நாய் இறந்து விட்டது.
இந்த தகவலை கல்யாணசுந்தரத்துக்கு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், டாமி உடல் கெடாமல் இருப்பதற்காக, குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வைக்க கூறியுள்ளார்.
அதன்படி, ‘டாமி'யை குளிப்பாட்டி மாலை அணிவித்து குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், குளிர்சாதனப் பெட்டி (ப்ரீசர்) வாடகைக்கு எடுத்து வரப்பட்டு, அதில் நாய் ‘டாமி'யை கிடத்தி, மாலை அணிவித்து குடும்பத்தினர் பாதுகாத்து வந்தனர்.
கல்யாண சுந்தரம் ஊர் திரும்பிய பிறகு, அவரது முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், டாமி நாய் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் திசையன்விளை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications