திருநங்கையை மணம் புரிய கலெக்டரிடம் பெட்டிஷன் கொடுத்த தேனி இளைஞர்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திருநங்கை ஒருவரை மணம் புரிய அனுமதி கோரி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த திருநங்கை தாமரை. 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் அருகே உள்ள வீரக்கல் வண்ணம்பட்டியை சேர்ந்த முத்து என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

முத்து திண்டுக்கல்லில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். தாமரை சக திருநங்கைகளுடன் கடை வீதிகளில் சென்று உதவி கேட்டபோது முத்துவுடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியதால் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு முத்துவின் பெற்றோர்களும் உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து தாங்கள் திருமணம் செய்து கொள்ள அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலத்தை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம். இதற்கு பெற்றோர், உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எங்களை பிரிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.

எங்கள் திருமணத்தை சமூகம்தான் அங்கீகரிக்கவில்லை அரசாவது அங்கீகாரம் வழங்க வேண்டும். திருமண உதவி தொகை, சேர்ந்து வாழ வீடு வழங்கி பாதுகாப்பும் கொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, இயற்கைக்கு முரணான இத்திருமணம் பற்றிய விவாதம் அதிகாரிகளிடையே நடைபெற்று வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+