Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PS-2: ஆதித்த கரிகாலன் நந்தினி அந்தப்புரத்தில் தற்கொலை செய்தாரா? மணிரத்னம் கிளப்பிவிட்ட புது சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்து கொள்வதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கக் கூடிய காட்சியை இயக்குநர் மணிரத்னம் இடம்பெறச் செய்திருப்பது அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

மனித குல வரலாற்றில் அரசுகள், மன்னர்கள் ஆட்சி முறை உருவான காலம் தொட்டே அரண்மனை சதிகள், அந்தப்புரப் படுகொலைகள் என்பது சரித்திரத்தின் அத்தனை பக்கங்களிலும் நிறைந்தே கிடக்கின்றன. இதில் ஒன்றுதான் பிற்கால சோழர்களில் ஒருவரான ஆதித்த கரிகாலன் படுகொலை சம்பவமும்.

Mani Rantanam Ponniyin Selvan-2 Controversy: Aditya karikalan Killed by Nandhini or Suicide?

பிற்கால சோழப் பேரரசில் மூத்தவரான சுந்தர சோழன்- வானவன் மாதேவியருக்கு 3 குழந்தைகள். அதில் மூத்தவர் ஆதித்த கரிகாலன். 2-வது பிள்ளை குந்தவை. 3-வதுதான் அருள்மொழி வர்மன் எனும் ராஜ ராஜ சோழன்.

சுந்தர சோழனும் கூட பட்டத்து அரசர் அல்ல. பிற்கால சோழர் காலம் ஆதித்த சோழனில் அதாவது கிபி 9-ம் நூற்றாண்டில் தொடங்குகிறது. ஆதித்த சோழன், பராந்தக சோழன் வரிசையில் கண்டராதித்தர் வருகிறார். அவரது மறைவுக்குப் பின் கண்டராதித்தர் மகன் மதுராந்தக சோழன் சிறுவன் என்பதால் முடிசூட்டவில்லை. கண்டராதித்தர் மகன் அரிஞ்சயன், சோழ மன்னனாராகிறார். அவர் ஓராண்டில் மரணத்தைத் தழுவ வேறுவழியே இல்லாமல் சுந்தர சோழன், சோழர் அரசராக மகுடம் சூட்டுகிறார். அந்த சுந்தர சோழனின் 3 பிள்ளைகள் வளர்ந்து வரும் நிலையில் கண்டராதித்தர் மகன் மதுராந்தகனும் வளர்ந்து நிற்கிறார். இதனால் மதுராந்தகனுக்கே சோழ அரசுரிமை என்கிற கருத்து முன்வைக்கப்பட்டு சதியும் நடக்கிறது.

இன்னொரு பக்கம் சுந்தர சோழனின் மூத்தவன் ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னர் வீரபாண்டியன் தலையை வெட்டி அப் பேரரசை நிர்மூலமாக்குகிறான் (ஆதாரம்: ஆனைமங்கல செப்பேடு). இதனால் பாண்டியர்கள் ஆதித்த கரிகாலனை வீழ்த்த வியூகம் வகுக்கின்றனர்.

ஆதித்த கரிகாலன், இளம் பிராயத்தில் நேசித்த நந்தினி சோழ தேசத்தில் இர்ருந்து விரட்டியடிக்கப்பட்டு பாண்டியன் வீரபாண்டியனிடம் அடைக்கலமாகிறாள். அந்த நந்தினி முன்னரே பாண்டியன் வீரபாண்டியன் தலையை வெட்டி எடுத்தான் ஆதித்த கரிகாலன். அதனால் நந்தினி, சோழர் சிற்றரசர் பெரியர் பழுவேட்டரையரை வளைத்துப் போட்டு பழுவூர் அரசியாகிறார். அந்த நந்தினியும் ஆதித்த கரிகாலனை வீழ்த்த கடம்பூர் மாளிகையில் சதித் திட்டம் தீட்டுகிறார்.

இவை வரலாற்றின் பக்கங்களில் செப்பேடுகளாக, கல்வெட்டுகளாக பதிவாகி இருக்கின்றன. இவை அனைத்தையும் பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2-ல் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

ஆனால் நந்தியினியின் கடம்பூர் அரண்மனையில் ஆதித்த கரிகாலன் கிபி 969-ம் ஆண்டு கொல்லப்பட்டான் என்கிறது வரலாறு. இந்த கொலை சதி, கொலை சதியில் ஈடுபட்டோர், அத்தனை பேருக்கான தண்டனை என அனைத்தும் கூட கல்வெட்டுகள், செப்பேடுகளாகத்தான் இருக்கின்றன. அதாவது வரலாற்று சாட்சிகளாக இருக்கின்றன.

Mani Rantanam Ponniyin Selvan-2 Controversy: Aditya karikalan Killed by Nandhini or Suicide?

கடலூர், காட்டுமன்னார்குடி உடையார்குடி கல்வெட்டுதான் ஆதித்த கரிகாலன் கொலைக்கு சான்று:

"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்............................................... தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........................ராமத்தம்

என்கிற இக்கல்வெட்டில் பாண்டியன் தலைகொய்திய ஆதித்த கரிகால சோழனைக் கொன்று என்று தெளிவாகவே இடம்பெற்றுள்ளது.

ஆனால் ஆதித்த கரிகாலன் படுகொலையை படமாக்கிய மணிரத்னமோ, ஏதோ நந்தினியின் கையில் இருந்த குறுவாளில் ஆதித்த கரிகாலனே குத்திக் கொண்டு தற்கொலை செய்வது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் படமாக்கி இருக்கிறார். இதுதான் இப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மணிரத்னம் அப்படி எல்லாம் செய்யவில்லை என்கிற சப்பை கட்டுகளும் வலம் வருகின்றன. ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்து கொண்டான் என்பதாகவே படம் பார்த்த நமக்கும் விதைக்கப்படுவதாலேயே நாமும் இதனை சுட்டிக்காட்டுகிறோம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+