வைகோவுக்கு கொலை மிரட்டல் விடுத்த எச்.ராஜாவைக் கைது செய்ய பெ.மணியரசன் கோரிக்கை!
சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு எச்சரிக்கை விடுத்த பாரதிய ஜனதாவின் தேசிய செயலர் எச். ராஜாவை கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக கைது செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
பாரதிய ஜனதாக் கட்சியின் இந்தியச் செயலாளர் எச்.ராஜா தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வைகோ பிரதமர் நரேந்திர மோடியையோ, மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத் சிங் போன்ற நாடு போற்றும் நல்ல தலைவர்களையோ எதிர்த்துக் கடுமையாகப் பேசிவிட்டுப் பாதுகாப்பாகத் திரும்ப முடியாது என்று எச்சரிக்கை விடுக்கிறேன்" என்றும் "அவர் நாவை அடக்காவிட்டால், அவரை அடக்குவது எப்படி என்று ஒவ்வொரு பா.ச.க. தொண்டனுக்கும் தெரியும்" என்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் கூறியுள்ளார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களின் மதிப்பையும் மக்களின் அன்பையும் பெற்று வன்முறை அரசியலுக்கு இடமில்லாமலும், தனிநபரை இழிவுபடுத்தும் கொச்சை அரசியல் செய்யாமலும், நாற்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருபவர் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியதாகச் சொல்லப்படும் சென்னை தியாகராயர் நகர் ‘தியாகத் திருநாள் - பினாங்குப் பிரகடன விளக்கப் பொதுக்கூட்டத்தில்' நானும் கலந்து கொண்டேன்.
அக்கூட்டத்தில், இந்தியாவில் 75 விழுக்காட்டினர் இந்தி பேசுவோர் என்று ராஜ்நாத் சிங் கூறியிருப்பதைத் தவறான தகவல் என்றும், இந்தி பேசாத தமிழ்நாட்டு மக்களை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் இந்தியாவிலிருந்து எங்களை விட்டுவிடுங்கள் என்றும், காத்மாண்டு சார்க் மாநாட்டில் நரேந்திர மோடி, ராசபக்சேவுக்கு இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்துப் பேசியது ஓர் அரசு வெளிநாட்டுத் தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய பொதுநிலை தவறிய போக்கு என்றும் வைகோ விமர்சித்தார்.
இது பற்றித் தஞ்சையில் செய்தியாளர்கள் கேட்ட போது, எச்.ராஜா மேற்கண்டவாறு கூறி, வைகோவுக்கு எதிராகத் தன் கட்சித் தொண்டர்களிடம் வன்முறைவெறியைத் தூண்டியுள்ளார்.
"வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது என்று எச்சரிக்கை விடுக்கிறேன்" என்று எச்.ராஜா கூறியிருப்பது கொலை மிரட்டல் குற்றமாகும். எனவே, தமிழக அரசு, எச்.ராஜா மீது இந்தியத் தண்டனைச் சட்டம் - 506(II) பிரிவின்கீழ், கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து அவரை உடனடியாகக் கைது செய்ய ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழினம் - தமிழ் மொழி ஆகியவற்றின் தற்காப்புக்குப் பா.ஜ.க. கட்சி பேராபத்தாக உள்ளது என்பதைத் தமிழக மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி புரிந்து கொண்டு, அக்கட்சியைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications