ஓட்டு போட போனால் குடையோட போங்க மக்களே.. அடுத்த 4 நாட்களுக்கு செம மழை இருக்கு!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் இன்று மாலையோடு முடிகிறது. இதனால் தேர்தல் களத்தில் நிலவி வந்த சூடு கொஞ்சம் தணியும். அதேபோல் தற்போது தமிழகத்தில் நிலவி வந்த சூடான வானிலையும் கொஞ்சம் தணிய போகிறது மக்களே.

Many parts of Tamilnadu may get heavy rain for the next 4 days

தமிழகத்தில் அக்கினி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பநிலை உச்சம் தொட்டு இருக்கிறது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் மழை பெய்ய போகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உள்கர்நாடகா முதல் குமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தை நோக்கி வலுவான காற்று வீச போகிறது.

இந்த காற்று ஏற்கனவே இருக்கும் காற்றுடன் மோதி மழையை கொண்டு வர போகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய தொடங்கும். பின் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்.

இதனால் டெல்டா மற்றும் கடலோர பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பெங்களூர் அருகே ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் சென்னை மக்களே இதை படித்துவிட்டு சந்தோசத்தில் துள்ளி குதிக்க வேண்டாம். சென்னைவாசிகள் இன்னும் சில நாட்களுக்கு மழையின் தரிசனத்தை பெற முடியாது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+