முதன்முறையாக தேர்தலில் களமிறங்கும் காஞ்சி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக தையூரைச் சேர்ந்த மரகதம் குமரவேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் (தனி), ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் காஞ்சிபுரம், உத்தரமேரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, செய்யூர், திருப்போரூர் ஆகிய 6 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த செங்கல்பட்டு லோக்சபா தொகுதி மறுசீரமைப்பைத் தொடர்ந்து காஞ்சிபுரம் (தனி) லோக்சபா தொகுதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட லோக்சபா தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி வேட்பாளராக தையூரைச் சேர்ந்த 30 வயது மரகதம் குமரவேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பி.காம்., பட்டதாரியான மரகதம் குமரவேல், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர். தற்போது திருப்போரூர் ஒன்றியக் குழுத் தலைவராக உள்ள இவர், கடந்த 5 ஆண்டுகளாக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை திருப்போரூர் ஒன்றிய இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
மரகதம் முதல்முறையாக தற்போது லோக்சபா எம்.பி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications