கனிமொழியை சந்திக்கவில்லை.. கோபாலபுரமும் செல்லவில்லை.. அழகிரி அப்செட்!
மு.க அழகிரி நடத்தும் பேரணிக்கு வந்து இருக்கும் அவரது தொண்டர்கள் வித்தியாசமான கருப்பு நிற டீ-சர்ட் அணிந்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: பேரணி நடத்த சென்னை வந்து இருக்கும் மு.க அழகிரி கனிமொழியை சந்திக்கவில்லை. அதேபோல் கோபாலபுரம் இல்லத்திற்கும் அவர் செல்லவில்லை.
திமுகவில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி நோக்கி மு.க அழகிரி நடத்தும் பேரணிதான் இதற்கு காரணம்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை மு.க அழகிரி தலைமையில் நோக்கி இன்று அமைதி பேரணி நடத்தப்பட உள்ளது. இன்று காலை 11 மணி அளவில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கனிமொழியை சந்திக்கவில்லை
சென்னை வந்த அழகிரி பேரணிக்கு முன் கனிமொழியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கனிமொழியை சந்தித்து, பேரணிக்கு அழைப்பு விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஆம், நேற்று அதிகாலையே சென்னை வந்த அழகிரி இப்போது வரை கனிமொழியை சந்திக்கவில்லை.

கோபமாக இருக்கிறாரா?
கனிமொழியும் அழகிரியும் ஸ்டாலினின் பதவி ஏற்பிற்கு முன்பு வரை நெருக்கமாக இருந்ததாகவே கூறப்படுகிறது. ஆனால் ஸ்டாலின் பதவி ஈர்ப்பில் கனிமொழி கலந்து கொண்டதும், ஸ்டாலினின் பதவி ஏற்பிற்கு கனிமொழி வாழ்த்து தெரிவித்ததும் அழகிரிக்கு கோபத்தை உண்டாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் கனிமொழியை சந்திக்கவில்லை என்று தகவல்கள் வருகிறது.

கோபாலபுரம் வீடு
சென்னை வந்த அழகிரி அதேபோல் வேறு குடும்ப உறுப்பினர்களையும் சந்திக்கவில்லை. அவர் கோபாலபுரம் இல்லத்திற்கும் செல்லவில்லை. அங்கு ஸ்டாலின் இருப்பார் என்பதால் அங்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்டாலினை சந்திக்க விரும்பாத காரணத்தால் இப்படி செய்ததாக கூறப்படுகிறது.

ஹோட்டலிலேயே தங்கிவிட்டார்
இதன் காரணமாக சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். எப்போதும் அவர் சென்னையில் தங்கும் ஹோட்டல் ஆகும் இது. மெரினாவில் முதலில் பேட்டி அளித்த அன்றும் இங்குதான் தங்கி இருந்தார். இந்த நிலையில் தனக்கு நெருக்கமான சில நபர்களையும் அங்கேயே தங்க வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications