நடுக்கடலில் கார்டன்.. கண்ணாடி பாலம்.. 134 அடி உயரம்.. மெரினாவில் "கருணாநிதி பேனா" எப்படி இருக்கும்?
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவை மெரினாவில் சிலையாக அமைக்க உள்ளனர். இதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்த நிலையில் கடலில் இதற்கான கட்டுமானம் தொடங்க உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதி மெரினாவில் உள்ளது. அங்கிருந்து நேராக செல்லும் வகையில் கடலில் இந்த பேனா அமைக்கப்பட உள்ளது.
மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கி உள்ளது. ஏதாவது வழக்குகள் இதற்கு எதிராக தொடுக்கப்பட்டு இருந்தால், அதற்கு ஏற்ப கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனுமதி வழக்குகளின் முடிவுகளுக்கு உட்பட்டது. கட்டுமானத்தின் போது 15 பேர்கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு தனது பதிலில் தெரிவித்துள்ளது.

கட்டுமானம் எப்படி இருக்கும்?:இதற்கான கட்டுமானத்தை உலகத்தரத்தில் கட்ட இருக்கிறார்கள். இந்த பேனா சிலை 134 அடி உயரம் இருக்கும். திருவள்ளுவர் சிலை 133 அடி உயரம் கொண்டது.
இதைவிட 1 அடி உயரத்தில் பேனா சிலையை வைக்க உள்ளனர். இதை சுற்றி கடலிலேயே பெரிய கார்டன் இருப்பது போன்ற வசதியை ஏற்படுத்த போகிறார்கள். அதாவது நடுவில் மட்டும் பேனா இருக்கும்.
அதை சுற்றி தளம் அமைக்கப்பட்டு அதில் கார்டன் அமைக்கப்பட்டு இருக்கும். இதனால் மக்கள் பேனாவை தொட முடியாது. ஆனால் மெரினாவில் கடலில் இப்படி ஒரு அழகிய அமைப்பை ஏற்படுத்துவது சுற்றுலா துறையை மேம்படுத்தும் என்று கூறுகிறார்கள்.
கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் இந்த சிலை வைக்கப்பட உள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்தில் இது கட்டப்பட உள்ளது.

நேராக சமாதியில் இருந்தே செல்லும் வகையில் இங்கு நீண்ட பாலம் கட்டப்பட உள்ளது. கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று மக்கள் சிலையை ரசிக்கும்படி இந்த கட்டுமானம் செய்யப்பட உள்ளது.
கடலில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்படும். 7 மீட்டர் அகலம் கொண்டதாக இந்த பாலம் இருக்கும். மொத்தமாக இதற்கு 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது.

இந்த பகுதி சின்ன தீவு போல அமைக்கப்பட்டு, அங்கு மக்களுக்கு பல வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளது.
கருணாநிதியின் சமாதியில் இருந்து நேராக செல்லும் வகையில் கடலில் இந்த பேனா அமைக்கப்பட உள்ளது.
கருணாநிதியின் வசனங்கள், கதைகள், கவிதைகள், அவரின் எழுத்துக்களை புகழும் வகையில் தமிழ்நாடு அரசு மூலம் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இதை சுற்றி கடலிலேயே பெரிய கார்டன் இருப்பது போன்ற வசதியை ஏற்படுத்த போகிறார்கள்.
அதாவது நடுவில் மட்டும் பேனா இருக்கும். அதை சுற்றி தொங்கும் தோட்ட அமைப்பு இருக்கும். இதற்கான ஆய்வுகள் தற்போது நடந்து வருகின்றன.
எங்கே வருகிறது:மெரினாவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்திற்கு மிக அருகில் இந்த நினைவுச்சின்னம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கூவம் ஆறு கடலில் கடக்கும் இடத்திற்கு அருகில் பேனா நினைவுச்சின்னம் அமையவுள்ளது.
இங்கே அதிக மணல் உள்ளதாலும், தரை வலுவாக இருப்பதாலும், எளிதாக கட்டுமானம் மேற்கொள்ள முடியும். கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் இந்த சிலை வைக்கப்பட உள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்தில் இது கட்டப்பட உள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications