8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு.. திருவண்ணாமலையில் நடை பயணம்.. மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் கைது
8 வழிச்சாலையை எதிர்த்து நடை பயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் போலீஸாரால் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை: 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவண்ணாமலையில் நேற்று தடையை மீறி நடைபயணம் மேற்கொண்டதால் கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்டனர். நேற்று இரவு விடுவிக்கப்பட்ட, மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் நடைபயணம் மேற்கொண்டதால் போலீஸார் அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால், ஆயிரம் ஏக்கருக்கு மேலான காடுகள், விளைநிலங்கள் அழிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். மேலும், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து 'என் நிலம், என் உரிமை' என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை புதன்கிழமை நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்து நடைபயணத்துக்கு தடை விதித்தனர்.
நடைபயணத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடையை மீறி 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான நடைபயணம் நடக்கும் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்யினர் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நேற்று 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து 2000க்கும் மேற்பட்டோர் நடைபயணம் தொடங்கினர். அவர்களை போலீஸார் கைது செய்து இரவு 12 மணிக்கு விடுவித்தனர்.
விடுதலையான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 90 பேர் 8 வழிச்சாலைக்கு எதிரான நடைபயணத்தை மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் திருவண்ணாமலையிலிருந்து மீண்டும் தொடங்கினர். இதனால், போலீஸார் அவரகளைக் கைது செய்து மண்டபத்தில் சிறைவைத்தனர். இதையடுத்து, தடையை மீறி மீண்டும் நடைபயணம் மேற்கொண்டவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications