திருச்சி அருகே ஸ்டீல் ஆலையில் பயங்கர தீ விபத்து.. சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின
திருச்சி: திருச்சி அருகே தனியார் அலுமினிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிவதால் தொழிற்சாலையில் உள்ள சிலிண்டர்கள் வெடித்து சிதறுகின்றன. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அப்பல்லோ மருத்துவமனை அருகில் அமைந்துள்ளது ஓ.ஆர்.எஸ் ஸ்டீல் தொழிற்சாலை. தனியாருக்கு சொந்தமான இந்த ஆலையில் நண்பகல் 12 மணியளவில் சிலிண்டர் வெடித்து சிதறி தீ பற்றியது. தீ மளமளவென பரவியது. இதில் தொழிற்சாலையில் இருந்த சிலிண்டர்களும் வெடித்து சிதறின.

காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் அருகில் இருந்த முட்புதரும் தீ பிடித்து எரிந்தது. இதனால் ஆலையில் மேற்கூரையிலும் தீ பற்றியது. கொழுந்து விட்டு எரிந்த தீயினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

சிலிண்டர் வெடித்து சிதறுவதோடு தீயின் உக்கிரத்தால் புகை மண்டலமும் அதிகரித்துள்ளது. இதனால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications