உயர்ந்தது தீப்பெட்டி விலை.. 1995, 2007ம் ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் அதிகரிப்பு.. காரணம் விலைவாசி
கோவில்பட்டி: தீப்பெட்டிகள் தாயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவு உயர்வு காரணமாக, ஒரு ரூபாயில் இருந்து 2 ரூபாயாக தீப்பெட்டி விலையை உயர்த்தியுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
டிசம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது.
தீப்பெட்டி விற்பனை விலை 2007-ம் ஆண்டுதொடங்கி மாற்றமில்லாமல் ரூ.1 என்ற நிலையிலேயே விற்பனையாகி வந்தது.

ஆலோசனை கூட்டம்
தற்போது, மூலப்பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், லாரி வாடகை ஆகியவை உயர்வால், தீப்பெட்டி விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கையை முன் வைத்தனர். அதன்படி, அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

2 ரூபாய்
இதில், டிசம்பர் 1-ம் தேதி முதல் 50குச்சிகள் கொண்ட தீப்பெட்டியை ரூ.2-க்கு விற்பனைசெய்ய முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறுகையில் :

1995க்கு பிறகு
கடந்த 1995-ம் ஆண்டு 50 பைசாவாக விற்பனையானது 50 குச்சிகள் கொண்ட தீப்பெட்டி. 2007-ம்ஆண்டு ரூ.1 என தீப்பெட்டி விலை நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர் விலை உயர்த்தப்படவில்லை.

மூலப்பொருட்கள்
அக்.10-ம் தேதிக்குப் பின்னர், பொட்டாசியம் குளோரேட் ரூ.63-ல் இருந்து ரூ.78, சல்பர் ரூ.24-ல் இருந்து ரூ.31, மெழுகு ரூ.58-ல் இருந்து ரூ.80, சிவப்பு பாஸ்பரஸ் ரூ.425-ல் இருந்து ரூ.810 என மூலப்பொருட்கள் கடுமையான விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன. எனவே, 50 குச்சிகள் கொண்ட தீப்பெட்டி ரூ.2-க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வுகள்
ஏற்கெனவே, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்போது சமையலுக்கு பயன்படும் தீப்பெட்டி விலையும் உயர்ந்துள்ளது. சிறிய அளவுக்கு தான் விலை ஏற்றம் என்று நினைத்தாலும் கூட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தையும் மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் அது மிகப் பெரிய சுமையை ஏற்படுத்தியிருப்பதை உணர முடியும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications