அரசு பஸ்ஸை விடாமல் "விரட்டிய" பாமக அன்புமணி நறுக்! அது பாட்டுக்கு கழண்டு ஓடுதாம்! மலைத்த மயிலாடுதுறை

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: அரசுப்பேருந்துகளை எதுவுமே செய்யாமல் பழுது நீக்கி விட்டதாக கணக்கு காட்டுவதா? வண்ணம் பூசிவிட்டு புதுப்பிக்கப்பட்டு விட்டதாக பொய்க்கணக்கு காட்டுவதா? என்று திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

சமீப நாட்களாகவே, அரசு பஸ்களின் பராமரிப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்சி நகர பஸ்ஸில், கண்டக்டர் சீட்டிலிருந்து, நெட்டு போல்டு திடீரென கழண்டுவிட்டது.. இதனால், சீட்டில் உட்கார்ந்திருந்த கண்டக்டர் பஸ்சுக்கு வெளியே தூக்கி எறியப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Mayiladuthurai Government Bus and what did PMK Leader Anbumani Ramadoss say about Sirkazhi Gov Bus

விருதுநகர்: பிறகு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், கடந்த 15ம் தேதி பஸ்ஸின் பின்பக்க படிகட்டு உடைந்து சாலையின் நடுவே விழுந்தது...

இந்த வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதிரடி ஆய்வுகள்: அதன்படி, அரசு பஸ்களின் உள்புறத்தில் மழை நீர் வடிகிறதா? பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங் மற்றும் பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுகளை முன்னெடுத்திருந்தனர்.. ஆனால், இதற்குபிறகும்கூட, அரசு பஸ்களின் அவலம் நீடிக்கிறது.

4 நாட்களுக்கு முன்புகூட நாகையில், ஒரு பஸ் பிரேக் பிடிக்காமல் அது பாட்டுக்கு நடுரோட்டில் ஓடி பொதுமக்களை பதற வைத்தது. இப்போது மயிலாடுதுறையிலும் இன்னொரு அவலம் நடந்துள்ளது.

இதுகுறித்து, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நறுக்கென கேள்விகளை கேட்டுள்ளார். அத்துடன் சில கோரிக்கைகளையும் தமிழக அரசுக்கு விடுத்துள்ளார். அன்புமணி ராமதாஸ் தன்னுடைய அறிக்கையில் சொல்லி உள்ளதாவது:

"மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து வடரங்கம் என்ற கிராமத்தை நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான நகரப் பேருந்தில் சக்கரம் பனங்காட்டாங்குடி என்ற இடத்தில் கழன்று சாலையில் ஓடியது.

அரசு பேருந்துகள்: முன்புற சக்கரம் இல்லாமல் தடுமாறிய நகரப் பேருந்தை அதன் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு நிறுத்தியதால், அதில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்ட பயணியர் தப்பினார்கள். சக்கரம் தனியாக கழன்று ஓடும் நிலையில் மிகவும் அலட்சியமாக அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகள் பழுதடைவதும், விபத்துகளில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 24-ஆம் தேதி திருச்சியில் திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டார்.

பெண் பயணிகள்: அதற்கு முன் பிப்ரவரி 6-ஆம் தேதி சென்னை அமைந்தகரை பகுதியில் மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அரசுப் பேருந்துகள் பராமரிப்பின்றி மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இயக்கப்படுவது குறித்து கடந்த ஏப்ரல் 25-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுது பார்க்கப்பட்டதாகவும், அரசு பேருந்துகளில் இருந்து 17,459 பழுதுகள் கண்டறியப்பட்ட நிலையில் மே 4-ஆம் தேதி வரை 13,529 பழுதுகள் சரி செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள பழுதுகள் மே 6-ஆம் தேதிக்குள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்திருந்தன.

அரசு பேருந்துகள்: ஆனால், அதன்பின் 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடுகிறது என்றால் அரசுப் பேருந்துகள் பெயரளவில் தான் பழுது நீக்கப்பட்டனவா? என்ற வினா எழுகிறது.

அரசுப் பேருந்துகளை எதுவுமே செய்யாமல் பழுது நீக்கி விட்டதாக கணக்கு காட்டுவதும், பேருந்துக்கு வண்ணம் பூசி விட்டு புதுப்பிக்கப்பட்டு விட்டதாகவும் பொய்க்கணக்கு காட்டும் வழக்கம் தவிர்க்கப்பட வேண்டும்.

பழைய பஸ்கள்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதற்காகவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று அன்புமணி வலியுறுத்தியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+