சொல்ல முடியாத அளவுக்கு அட்டூழியம்.. இலங்கை புதிய அதிபர் அநுரவுக்கு மயிலாடுதுறை எம்.பி கடிதம்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேர் உள்பட அனைத்து இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மயிலாடுதுறை எம்.பி ஆர்.சுதா, இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசநாயகவுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, 4 ஃபைபர் படகுகளில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி 43 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் சிலர் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை பணி மேற்பார்வையாளர்கள் இதுகுறித்து பூம்புகார் துறைமுகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு ஃபைபர் படகுகளில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், சந்திரபாடி கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் ஆகிய 37 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது உறுதியானது.
எஞ்சிய இரண்டு படகுகளில் 6 மீனவர்கள் தப்பி, பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியது. மீனவர்களின் உறவினர்கள் அனைத்து மீனவர்கள் மற்றும் படகுகளையும் பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு கண்ணீர்மல்க மயிலாடுதுறை எம்.பி ஆர்.சுதாவுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி இலங்கையில் புதிதாக அதிபராகப் பதவியேற்றுள்ள அநுர குமார திசநாயகவுக்கு மயிலாடுதுறை எம்.பி ஆர்.சுதா கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறை எம்.பி ஆர்.சுதா எழுதியுள்ள கடிதத்தில், "மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பூம்புகார், சந்திராபாடி, வானகிரி, சின்னமேடு, மடத்துக்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இவர்கள் படகு கவிழ்ந்ததில் துரதிர்ஷ்டவசமாக கடலில் மூழ்கிய இலங்கை மீனவ சகோதரர்களின் உடல்களை மீட்டெடுக்க இலங்கை கடற்படைக்கு உதவியவர்கள்.
இச்சூழலில் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் இருதரப்பு உடன்படிக்கைகளில் உள்ள ஷரத்துகளை மீறி, இலங்கை கடற்படை ஆபத்தில் உதவிய எங்கள் மீனவர்கள் மீது சொல்ல இயலாத அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டு, சட்டவிரோதமாக கைது செய்துள்ளது.
எனவே, அந்த மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இதேபோல், இலங்கை சிறையில் வாடும் இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர்களின் அனைத்து படகுகளையும் கூடிய விரைவில் பயன்பாட்டு நிலையில் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications