For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்பவைத்து நெஞ்சில் குத்திவிட்டார் பிரதமர் மோடி... கறுப்புக்கொடி போராட்டத்தில் வைகோ குற்றச்சாட்டு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமருக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    உலக அளவில் டிரெண்டான #gobackmodi என்ற ஹேஷ்டேக்- வீடியோ

    சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சின்னமலைப் பகுதியில் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் கருப்புக்கொடி ஏந்தி பிரதமரின் வருகைக்கு மதிமுகவினர் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

    சென்னை சின்னமலை பகுதியில் மினி டெம்போவில் நின்றபடி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின் போது வைகோ பேசியதாவது : பிரதமர் நரேந்திர மோடிக்கு முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது நான் தான். இலங்கையில் கொத்துகொத்தாக தமிழர்களைக் கொன்ற அதிபர் ராஜபக்சேவை தனது பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் அழைத்திருந்தார்.

    MDMK chief Vaiko protested against PM Narendra Modis chennai visit

    தமிழகத்தில் இருந்து ஒரு தலைவர் கூட 3 நாட்கள் கண்டனக் குரல் எழுப்பவில்லை, முதன்முதலில் எதிர்ப்பை பதிவு செய்தது நான் தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தேன். 8 பக்கத்திற்கு ஒரு மெயிலை நான் மோடிக்கு அனுப்பினேன், அதில் நான் எங்களை நம்ப வைத்து முதுகில் அல்ல நெஞ்சில் குத்திவிட்டீர்கள் என்று சொன்னேன்.

    காவிரிக்கான போராட்டம் பல ஆண்டுகளாக நடக்கிறது, இது இன்று நேற்று நடக்கும் போராட்டம் என்று நினைத்துவிட வேண்டாம். காவல்துறையினரை ஆட்சியாளர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர், உரிமைக்காக போராடுபவர்களை ஒடுக்குவதற்காக காவல்துறையை தமிழக டிஜிபி தவறாக பயன்படுத்துகிறார். இது தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதை எங்களை போராட அனுமதியுங்கள் என்றும் வைகோ போராட்டத்தின் போது பேசினார்.

    English summary
    MDMK chief Vaiko protested against PM Narendra Modi who is not ready to take steps for implementation of cauvery management board.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X