வைகோ தேர்தல் சுற்றுப் பயணத்தில் மாற்றம்: வரும் 24ல் உளுந்தூர்பேட்டையில் பிரசாரம்
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ள இருந்த தேர்தல் சுற்றுப் பயணத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 24 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தே.மு.தி.க. - மக்கள் நல கூட்டணி - த.மா.கா. ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ கடந்த 16-ந் தேதி முதல் தனது முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏப்ரல் 27 ஆம் நாள் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்கிறார். எனவே, அன்று உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு பதிலாக ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை அன்று உளுந்தூர்பேட்டை தொகுதி கிராமங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வைகோ சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து விழுப்புரம், மைலம், திண்டிவனம், செஞ்சி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். எனவே, ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி, பல்லடம், தாராபுரம், கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் வைகோ மேற்கொள்ள இருந்த பிரசாரம் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப் படுகிறது. இது குறித்து விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications