ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும்: வைகோ
திருச்சி: சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க மக்கள் நலக்கூட்டணி சார்பில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்று அதன் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலருமான வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சியில் மதிமுகவின் 24 பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடுகிறது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணி தொடங்கப்பட்டு, குறைந்தபட்ச செயல்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தையும் முடித்துள்ளோம். மூன்றாவது கட்ட சுற்றுப்பயணத்தை மார்ச் 1-இல் தொடங்கி, 4-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நிறைவு செய்கிறோம். இதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் 4-ஆவது கட்ட பிரசாரம் நடைபெறும். பின்னர் மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிக்கப்படும்.
மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகள் முக்கிய நிர்வாகப் பொறுப்பில் அமர்த்தப்படுவார்கள். அதிமுகவோ அல்லது திமுகவோ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீட்க முடியாத நிலைக்குத் தமிழகம் சென்றுவிடும். எனவே, கூட்டணி ஆட்சி நடத்த எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள் எனக் கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்.
தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழுதான் முடிவு செய்யும்.
திமுக, அதிமுக கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கத் தயாராக உள்ளனர். எனவே, அவற்றை தடுக்க மக்கள் நலக்கூட்டணி சார்பில் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து, பணம் கொடுப்பதை தடுப்போம் என வைகோ தெரிவித்தார்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications