அனிதா குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல குழுமூர் செல்கிறார் வைகோ
அனிதாவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குழுமூர் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் இல்லத்துக்கு ஆறுதல் சொல்ல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செல்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் மரணத்தையொட்டி குழுமூருக்கு மு.க.ஸ்டாலின், தொல். திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் சினிமா துறையைச் சேர்ந்தவர்களும் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதுச்சேரியிலும் மாணவர்கள் தன்னெழுச்சியாக 5ஆவது நாளாக போராடி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அரியலூர் மாவட்டம் குழுமூரில் இருக்கும் அனிதாவின் இல்லத்துக்கு சென்று அவருடைய தந்தைக்கும் அண்ணன்களுக்கும் ஆறுதல் கூற இன்று மாலை 6 மணியளவில் செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
