திருச்சியில் மதிமுகவினர் ரயில் மறியல் - வைகோ உள்பட 500 தொண்டர்கள் கைது #TamilNaduBandh
திருச்சி: திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வைகோ உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் மறியல் போராட்டத்திற்காக பேரணியாக சென்ற வைகோவை ரயில் நிலையம் அருகே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்ட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கடந்த ஒரு வார மாக வன்முறை நடைபெற்றது. இதில், தமிழர்கள் கடுமையாக தாக்கப்பட்டும், அவமானப்படுத் தப்பட்டும் உள்ளனர். தமிழர்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப் பட்டுள்ளன.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இந்த முழு அடைப்புக்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
காலை 6 மணிமுதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம், ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சியில் பேரணியாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற வைகோ உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
தொல். திருமாவளவன் கைது
இதேபோல சென்னையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட நூற்றுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டையில் விருதுநகர் - திருச்சி பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications