உட்கட்சிப் பூசல்... தேமுதிக கொடிக்கம்பங்களை கட்சியினரே அகற்றியதால் பெரியகுளத்தில் பரபரப்பு
பெரியகுளம் தேமுதிக மாவட்ட செயலாளருக்கு எதிராக கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது.
Recommended Video

பெரியகுளம்: நாளுக்கு நாள் தேமுதிமுகவுக்கு பின்னடைவுதான் ஏற்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தலின்போது கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து முன்னாள் எம்.எல்.ஏக்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என ஒவ்வொருவராக வெளிவரத் தொடங்கினர். இது கட்சித்தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனுடன் கட்சி நிறுவனரும் தலைவருமான விஜயகாந்த்தின் உடல்நிலை சேர்ந்து கொள்ளவும் நிலைமை கட்சி நிலைமை இன்னும் படுமோசமானது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேமுதிக பொறுப்பாளர்கள், செயலாளர்களிடையே பிளவு ஏற்பட்டு வருகிறது. தற்போது விஜயகாந்த் சிகிச்சையின்கீழ் உள்ளதால் நிர்வாக குறைகளை சரிகட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்றுகூட பெரியகுளத்தில் தேமுதிகவில் ஏற்பட்ட எதிர்ப்பு தற்போது முற்றி வெடித்துள்ளது. பெரியகுளம் கட்சியின் மாவட்ட செயலாளராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், தேமுதிக நகர செயலாளர் பதவிக்கு 30 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு உறுப்பினர்கள் தர மறுத்தனர். அதனால், அந்த ஊருக்கு சம்பந்தமே இல்லாத வெளி ஊரை சேர்ந்த ஒருவருக்கு நகர செயலாளர் பதவியை கொடுத்து விட்டதாக உள்ளூர் தேமுதிகவினர் பலமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்காக தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும்பொருட்டு, பெரியகுளத்திலுள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் தேமுதிகவினரே அகற்றி தள்ளினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சியின் தலைமை தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டு, நாளுக்கு நாள் தேய்ந்துவரும் கட்சியை உடனடியாக வலுப்படுத்தாவிட்டால், தேமுதிக சுவடு தெரியாமல் எதிர்காலத்தில் போய்விடக்கூடும் என கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications