ஐ.நா.வில் ராஜபக்சே உரையாற்ற எதிர்ப்பு- சென்னையில் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டம்!
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உரையாற்ற எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் மதிமுகவினர் அக்கட்சிப் பொதுச்செயலர் வைகோ தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் செப்டம்பர் 25-ந் தேதியன்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உரையாற்றுகிறார். ஆனால் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. மனித உரிமை குழுவுக்கு அனுமதி மறுத்து வரும் ராஜபக்சேவை ஐ.நா.சபையில் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என்பது தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு.

இதனால் ஐ.நா.வில் ராஜபக்சே உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் டெசோ அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தின. இதனைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் சென்னையில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ராஜபக்சேவை ஐநாவில் பேச அனுமதி அளிப்பதன் மூலம் அதன் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குள்ளாகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் குழு தனது விசாரணையை நடத்த வேண்டிய இடம் தமிழகம் என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications