மாலை முரசு அதிபர் பா ராமச்சந்திர ஆதித்தன் மரணம்!

அவருக்கு வயது 80.
தமிழர் தந்தை என்று போற்றப்பட்டவரும் தினத்தந்தி நிறுவனருமான சி பா ஆதித்தனாரின் மூத்த மகன் பா ராமச்சந்திர ஆதித்தன். தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்தவர்.
தந்தையின் வழியில் பத்திரிகைத் துறையில் நுழைந்த இவர் மாலை முரசு பத்திரிகையின் அதிபரானார். தேவி வார இதழைத் தொடங்கினார். தொடர்ந்து தேவியின் கண்மணி, பெண்மணி போன்ற இதழ்களையும் தொடங்கி நடத்தி வந்தார்.
தமிழ் நாளிதழ் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய புதுமையான நாளிதழான 'கதிரவனை' சென்னையிலும் நெல்லையிலும் தொடங்கினார். அன்றைக்கு மிக மிக வேகமாக வளர்ந்த நாளிதழ் என்ற பெருமை கதிரவனுக்கு உண்டு.
பெரிய அய்யா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் ராமச்சந்திர ஆதித்தன். தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜாம்பவனாகத் திகழ்ந்த ராமச்சந்திர ஆதித்தனுக்கு கண்ணன் ஆதித்தன், கதிரேசன் ஆதித்தன் என இரு மகன்களும், கீதா என்ற மகளும் உள்ளனர். மனைவி பெயர் பங்கஜம் அம்மாள்.
சென்னை அடையாறில் வசித்து வந்த ராமச்சந்திர ஆதித்தன், இன்று காலை லேசாக நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிர் பிரிந்துவிட்டது.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை மீட்டதில் முக்கியப் பங்காற்றியவர் ராமச்சந்திர ஆதித்தன். தொண்ணூறுகளில் இதற்காக பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைத்து, வங்கியை மீட்டார். அதன் இயக்குநராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.
ராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபங்களும் முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் அடையாறில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை காலை பெசன் நகர் மயானத்தில் அவர் உடல் தகனம் செய்யப்படுகிறது.
தம்பியை இழந்த குறுகிய காலத்தில்...
சில மாதங்களுக்கு முன்புதான் பா. ராமச்சந்திர ஆதித்தன் தம்பியும், தினத்தந்தி அதிபருமான பா. சிவந்தி ஆதித்தன் மரணமடைந்தார். இந்த நிலையில் பா.ராமச்சந்திரன் ஆதித்தன் மறைந்திருப்பது தந்தி - மாலைமுரசு குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications