தினத்தந்தி அதிபர் பா சிவந்தி ஆதித்தன் மரணம்!
சென்னை: தினத்தந்தி அதிபர் பா சிவந்தி ஆதித்தன் வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.
தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி பா ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன்.
ஆதித்தனாரின் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நாளிதழின் அதிபராகப் பொறுப்பேற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இதழியல் துறையில் சிறப்பான இடம் வகித்தவர்.

கல்விப் பணியில் மிகச் சிறந்த இடம் வகித்தவர் சிவந்தி ஆதித்தன். தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரைச் சுற்றிலும் கல்லூரிகளை நிறுவி அந்தப் பகுதி மக்களின் உயர் கல்விக்கு வழிவகுத்தவர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிவந்தி ஆதித்தன். இன்று மாலை அவர் உயிர் பிரிந்தது.
தினத்தந்தி, மாலை மலர், ராணி, கோகுலம் கதிர் என பல பத்திரிகைகளை நடத்திய அவர், சமீபத்தில்தான் தந்தி டிவியைத் தொடங்கினார்.
சிவந்தி ஆதித்தனுக்கு மனைவியும் பாலசுப்ரமணிய ஆதித்தன் என்ற மகனும் உள்ளார்.
சிவந்தி ஆதித்தன் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications