மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் கிருஷ்ணபிரசாத்தின் உடல் ராமேஸ்வரம் வந்தடைந்தது!
சண்டிகரில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவர் கிருஷ்ணபிரசாத்தின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் வந்தடைந்தது.
Recommended Video

ராமேஸ்வரம் : சண்டிகரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மாணவர் கிருஷ்ணபிரசாத்தின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
ஹரியானா மாநிலம் சண்டிகரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் முதுநிலை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(PGIMER) உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணபிரசாத், கல்லூரி விடுதி அறையில் தங்கி முதுநிலை முதலாமாண்டு மருத்துவம் படித்து வந்தார்.

படிப்பில் படுசுட்டியான கிருஷ்ணபிரசாத் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். இதுதொடர்பாக ராமேஸ்வரத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவரின் மரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என மாணவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கிருஷ்ணபிரசாத்தின் குடும்பத்திற்கு அரசு நிவாரணமாக ரூ. 3 லட்சம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து கிருஷ்ணபிரசாத்தின் உடல் சண்டிகரில் இருந்து ராமஸ்வேரம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிருஷ்ணபிரசாத்தின் தந்தை புரோகிதர் குடும்பத்தில் மூத்த மகனான கிருஷ்ணபிரசாத் மீது அவரது குடும்பத்தினர் மிகுந்த பாசம் வைத்துள்ளனர். கிருஷ்ணபிரசாத்தின் உடலைப் பார்த்து அவரின் உறவினர்களும், குடும்பத்தாரும் கதறி அழுதனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications