மேல்மருவத்தூர் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா... கஞ்சிக்கலயம் சுமந்து பக்தர்கள் வழிபாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா இன்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கஞ்சிக்கலயம் சுமந்து வந்தும் பாலபிஷேகம் செய்தும் அன்னையை வழிபட்டனர்.

ஆதிபராசக்தி ஆலயத்தில் ஆடிப் பூர விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும். கடந்த புதன்கிழமை தொடங்கியது. அன்று அதிகாலை கருவறையில் உள்ள மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் யாக சாலை பூஜை, விளக்குப் பூஜை, வேள்வி பூஜையை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடக்கி வைத்தார்.

Melmaruvathur Adhiparasakthi temple Aadi Pooram

பீடத்தின் எதிரே உள்ள மைதானத்தில், பக்தர்கள் கொண்டு வந்த கஞ்சி அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

பிறகு சுயம்பு அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யும் வைபவம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

Melmaruvathur Adhiparasakthi temple Aadi Pooram

ஆடிப்பூர நாளான இன்று காலையில் சிறப்பு பூஜையை பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வந்திருந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டார்கள். இன்று 5ம் தேதி இரவு வரை பாலபிஷேக வைபவம் தொடர்ந்து நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+