For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாப்பாடை உருட்டி விளையாடாதேன்னு பெரியவங்க சொன்னா கேட்டா தானே!

நாடு முழுவதும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதை தொடர்ந்து அதுதொடர்பாக மீம்ஸ்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட அரிசி விற்பனை அதிகரித்து வருவது தொடர்பாக மீம்ஸ்கள் உருவாக்கியுள்ளனர். எத்தனை தொழில்நுட்ப வளர்ச்சி, அரசின் இயலாமைக்கு அதிரடி பதில்கள்தான் இந்த மீம்ஸ்கள்.

நாடு முழுவதும் பிளாஸ்டிக் அரிசிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த அரிசியை உண்வதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாக தெரிகிறது.

பிளாஸ்டிக் அரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தை உருண்டையாக உருட்டினாலும் கையில் ஒட்டாது. அதை பந்து போல் விளையாடினாலும் உடையாது என்று சமூகவலை தளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

பெரியவங்க சொல்றத கேட்டாதானே

சாப்பாடை உருட்டி விளையாடாதேன்னு பெரியவங்க சொன்னா கேட்டா தானே இப்போ கிரிக்கெட் விளையாடுற அளவுக்கு ரெடி பண்ணிட்டானுக காவாலிக என்கிறார் இந்த வலைபதிவாளர்.

கவர்மென்டுக்கு மக்களின் செய்தி

கவர்மெண்ட் டூ மக்கள்: பிளாஸ்டிக் உபயோகிக்காதீர்
மக்கள் டூ கவர்மெண்ட: பிளாஸ்டிக்கை அனுமதிக்காதீர்

தெர்மாகோல் அரிசிதானே

தமிழகத்தில் #பிளாஸ்டிக்அரிசி கிடையவே கிடையாது: சொல்கிறார் அமைச்சர் காமராஜ்
ஆமா ! எல்லாமே THERMAKOL அரிசி தான்.

தரையில் அடிச்சும் பாருங்க...

நல்ல அரிசியை வடிச்சா பார்த்தா மட்டும் தெரியாது.. தரையில அடிச்சும் பார்க்கனும் போல...

ராஜூ பாய் கிட்ட சொல்லுங்க

தமிழகத்தில் பிளாஸ்டிக்அரிசி கிடையவே கிடையாது: அமைச்சர் காமராஜ்.
செல்லூர் ராஜூபாய் கிட்ட சொல்லி தெர்மாகோல்ல ரெடி பண்ணுங்க

பிளாட்டினமா கிடைக்கும்

விவசாயிகளை நிர்வாணமாக்கி வீதியில் அலைய விட்ட இந்த சமூகத்திற்கு பிளாஸ்டிக் அரிசி கிடைக்காமல் பிளாட்டினம் அரிசியா கிடைக்கும்.

நம்ப முடியவில்லை

இந்த காலத்தில் சோற்றை கூட நம்பி உண்ணமுடியவில்லை. பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்திருக்காமே. நல்ல விஞ்ஞான வளர்ச்சி.

English summary
Plastic rice is on sales. If we uses this type of rice, will led to cancer. Tamil memes engineers created memes and roaming it in internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X