திருட்டு நகைகளை வாங்கி விற்க மாட்டோம் – வணிகர் சங்க பேரவை உத்தரவாதம்
சென்னை: தமிழ்நாட்டில் திருட்டு நகை வாங்கி விற்பனை செய்பவர்களுக்கு வணிகர்களாகிய நாங்கள் துணை நிற்க மாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா, மாவட்டத் தலைவர் ஜோதிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விருகம்பாக்கத்தில் அடகு மற்றும் நகை வணிகம் செய்யும் வணிகர் ஹிராராம் என்பவர் அக்டோபர் 22 ஆம் தேதி அன்று அவர் கடையில் வைத்து கொலை செய்யப்பட்டார். நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.
காவல்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றவாளிகளை உடனே கைது செய்து நடவடிக்கை எடுத்தும், வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் வேண்டுகிறோம்.
திருட்டு நகை சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் திடீரென்று கடையில் நுழைந்து அடகு மற்றும் நகை வணிகர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
மேலும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அப்பாவி வணிகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. திருட்டு நகை வாங்கி விற்பனை செய்பவர்களுக்கு பேரமைப்பும், வணிக சங்கங்களும் துணை நிற்காது.
ஆனால் அப்பாவி வணிகர்கள் காவல் துறையால் பாதிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இதுகுறித்து அழைத்துப் பேசி தீர்வுகாண வேண்டுகிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications