அன்று ஜெயலலிதா தலைவிரி கோலம்.. இன்று தீபா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 1989ம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டார் இன்று ஜெயலலிதாவின் வீட்டில் அவரது அண்ணன் மகள் தீபா தாக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று காலை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தார். அவரை வீட்டிற்குள் நுழைய விடாமல் டிடிவி தினகரன் தரப்பு தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் தாக்கப்பட்டதாக தீபா தெரிவித்துள்ளார்.

தாக்குதல்

தாக்குதல்

என் சகோதரர் தீபக் அழைத்து தான் போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்தேன். என்னை வரவழைத்து தாக்கியுள்ளனர். சசிகலா, தினகரனின் ஆதரவாளர்கள் தான் என்னை தாக்கினர். செய்தியாளர்கள் உதவியால் தப்பித்து வெளியே வந்தேன் என்றார் தீபா.

ஜெயலலிதா

ஜெயலலிதா

1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டார். துரைமுருகன் அவரது சேலையை பிடித்து இழுத்ததில் சேலை கிழிந்துவிட்டது என்றார் ஜெயலலிதா.

தலைவிரி கோலம்

தலைவிரி கோலம்

சட்டசபையில் தாக்கப்பட்டு கிழிந்த சேலையும், தலைவிரி கோலமுமாக ஜெயலலிதா கதறியது அப்போது நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் ஜெயலலிதாவின் கார் மீது உதயசூரியன் சின்னம் பொறித்த கார் மோதி விபத்துக்குள்ளானதும் பலரையும் அதிர வைத்தது.

தீபா

தீபா

அத்தை சட்டசபையில் தாக்கப்பட்டார். தீபாவோ ஜெயலலிதாவின் வீட்டில் தாக்கப்பட்டுள்ளார். அன்று ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நிலை இன்று தீபாவுக்கு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
J. Deepa was attacked at former CM Jaya's Poes garden residence on sunday. It is noted that earlier Jayalalithaa was attacked in TN assembly.
Please Wait while comments are loading...