தமிழகத்தில் நாளையும் சிலு சிலு மழை.. வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சி அறிவிப்பு
தமிழகத்தில் நாளையும் சிலு சிலுவென மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை: தென் தமிழகத்தில் இரண்டு நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்திலும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்திலும் எதிர்ப்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை.

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு 65 சதவீதம் அளவிற்கு குறைவாகவே பெய்துள்ளது. இதனால் நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. வரலாறு காணாத வறட்சியின் காரணமாக பல மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.
இந்நிலையில், தென் தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி மழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அது சொன்னது போன்றே கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் தென் பகுதிகளில் மழை பெய்தது.
இதனைத் தொடர்ந்து, நாளையும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி கடற்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்றும் பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications