For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வானத்தில் பொழியும் எரிகல் மழை.. ஏலகிரியில் நடந்த அதிசய நிகழ்வு.. வியக்க வைக்கும் போட்டோஸ்!

Google Oneindia Tamil News

திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் வானில் எரிகல் விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது. சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இதை கண்டு கழித்துள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை சென்னைக்கு அருகில் இருக்கும் ஒரு முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு உள்ள படகு சவாரி பறவைகள் சரணாலயம் போன்றவற்றை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதும் உண்டு. கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் தான் இங்கு அதிக அளவில் மக்கள் வர தொடங்கியுள்ளனர்.

Meteor Shower in Yelagiri Tamil Nadu: Photos will take your breath away

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஏலகிரி மலை பகுதியில் வானியல் நிகழ்வுகளை ரசிக்க கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொங்கியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் நட்சத்திரங்களை கண்டுகளிக்க கூடிய ஸ்டார் கேசிங் செய்ய கூடிய முக்கிய பகுதியாக இந்த ஏலகிரி மலை பகுதி மாறி வருகிறது. அதுக்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் ஒளி மாசுபாடு குறைந்த அளவே இருப்பதும், இந்த பகுதி சென்னைக்கு பக்கத்திலேயே இருப்பதுமாகும்.

இதற்கிடையே தான் ஏலகிரி மலைப்பகுதியில் 2 நாட்களுக்கு முன் வானில் எரிகற்கள் எரிந்து விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது. மீடியோர் ஷவர் என அழைக்கப்பட கூடிய எரிகற்கள் மழை பொழியும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலங்களில் நடைபெறும். விண்வெளியில் சுற்றி திரிய கூடிய வால்நட்சத்திரங்கள் நம்முடைய பூமியின் பாதைகளில் கடந்து சென்ற பின்னர் அதனுடைய தூசுக்களை அந்த பகுதியில் விட்டு சென்று இருக்கும்.

Meteor Shower in Yelagiri Tamil Nadu: Photos will take your breath away

நம்முடைய பூமி ஒவ்வொரு ஆண்டும் சூரியனை சுற்றி வரும் பொழுது அந்த தூசு இருக்கும் பகுதியை கடக்கும் பொழுது வால் நட்சத்திரம் விட்டுச்சென்ற தூசு மற்றும் கற்கள் நம்முடைய வளிமண்டலத்திற்குள் நுழையும் பொழுது அவை எரிந்து விழ தொடங்கிவிடும். இப்படி எரிந்து விழும் இந்த எரிகற்கள் பார்ப்பதற்கு சிவப்பு, மஞ்சள், ஊதா நிறங்களில் காட்சியளிக்கும். ஒரு மணி நேரத்திற்கு அதனுடைய தன்மைக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவிலான எரிகல்லை நம்மால் பார்க்க முடியும்.

Meteor Shower in Yelagiri Tamil Nadu: Photos will take your breath away

இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த ஆண்டுக்கான ஓரியனிட்ஸ் மீடியோர் என அழைக்கப்பட கூடிய எரிகல் விழும் நிகழ்வு இந்த மதம் நடைபெற்றுள்ளது. அக்டோபர் 2 முதல் நவம்பர் 7 வரை நடைபெற கூடிய இந்த நிகழ்வில் இரவு நேரங்களில் வானில் எரிகல் வேகமாக எரிந்து விழுவதை பார்க்க முடியும்.

அப்படித்தான் கடந்த 2 நாட்களுக்கு முன் ஏலகிரி மலை பகுதியில் எரிக்கல் எரிந்து விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது.நள்ளிரவுக்கு பின் நடைபெற்ற இந்த நிகழ்வை ஏராளமான சுற்றுலா பயணிகளும் கண்டுகளித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியுள்ளது.

சூரிய கிரகணம்..வானத்தில் அதிசய நிகழ்வு எங்கெங்கு தெரியும்..வெறும் கண்ணால் பார்த்தால் என்ன பாதிப்பு? சூரிய கிரகணம்..வானத்தில் அதிசய நிகழ்வு எங்கெங்கு தெரியும்..வெறும் கண்ணால் பார்த்தால் என்ன பாதிப்பு?

English summary
Meteor Shower in Yelagiri Tamil Nadu: Photos will take your breath away .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X