வானிலை இலாகாவின் பெரும் தோல்வி.. சந்திரனுக்கு ராக்கெட் விட முடியுது, புயலை கண்டுபிடிக்க முடிந்ததா?
Recommended Video

சென்னை: உரிய நேரத்தில் புயல் குறித்த முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையங்கள் எதுவுமே தெரிவிக்கவில்லை என்பதுதான் குமரி மாவட்ட மீனவர்களின் பெரும் பிரச்சினைக்கு காரணமாகியுள்ளது. அதுதான் இன்று அரசுக்கு எதிராக விஸ்வரூப பிரச்சினைகள் வடிவத்தில் எதிரொலிக்கிறது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி பிறகு புயலாக மாறியது.
டிசம்பர் 1ம் தேதி குமரி மாவட்டத்தில் பலத்த சூறை காற்றுடன் இந்த புயல் கோரத்தாண்டவம் ஆடியது. இதனால், பலா, வாழை, ரப்பர் மரங்கள் விழுந்து நொறுங்கின. மழை கொட்டிக்கொண்டிருந்தது.

புயல் ஆட்டம்
2000த்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து, குமரி மற்றும் அண்டை மாவட்டமான நெல்லையின் கடலோர பகுதிகளிலும் மின்சார இணைப்பு இன்றி மக்கள் தவித்தனர். செல்போன் கோபுரங்கள் விழுந்ததால் மக்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடல் கொந்தளித்து கிராமங்களுக்குள் சில அடி தூரம் வந்தது. அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்தன.

தனியார் வானிலை ஆய்வாளர்கள்
இப்படி பெயரிடப்படாத ஒரு பெரும் காற்று தென் மாவட்டத்தை புரட்டி போட்டுக்கொண்டிருந்தபோதும், அது புயல்தான் என்பதை அறிவிக்கவில்லை தமிழக வானிலை இலாகா. இந்திய வானிலை துறையும் அமைதி காத்தது. மறுபக்கம், தனியார் வானிலை ஆய்வாளர்களோ, ஐயோ, அது புயல்தாங்க என கதறியபடி இருந்தனர். கண்டுகொள்வார் இல்லை.

இதுதான் எச்சரிக்கையா?
சாவகாசமாக மதியம் வழக்கம்போல நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில், அது புயல்தான் என்று ஹஸ்கி வாய்சில் மெல்ல தகவல் வெளியிட்டது சென்னை வானிலை மையம். அந்த அறிவிப்பை (!) அறியக்கூட அப்போது குமரி மாவட்டத்தில் எந்த தொலைதொடர்பு சாதனமும் இயங்கவில்லை. ஏனெனில் புயல் அதற்குள்ளாக தனது வேலையை காட்டி முடித்திருந்தது. வானிலை இலாகா கணித்ததைவிட வேகமாக ஒகி புயலாக மாறி நகர தொடங்கியதே இதற்கு காரணம்.

2 நாட்கள் முன்பே
வழக்கமாக புயல் சின்னம் உருவானால் 2 நாட்கள் முன்பே கூறிவிடும் வானிலை ஆய்வு மையம், இம்முறை கோட்டை விட்டதன் கொடுமையைத்தான் குமரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி நடுக்கடலுக்கு சென்ற மீனவர்களும் அனுபவித்தனர். பல நாட்கள் முன்பே கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு எப்படி முன் அறிவிப்பு கொடுப்பது என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications