இன்று முதல் மெட்ரோ ரயிலில் 20 சதவீதம் கட்டணச் சலுகை- 3 வகை பயண அட்டைகளும் அறிமுகம்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் மூன்று வகையான பயண அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதுடன், பயணிகளுக்கு 20 சதவீத கட்டணச் சலுகையும் அளிக்கப்பட உள்ளது.
சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளில், முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி போக்குவரத்து தொடங்கப்பட்டது.
குறுகிய பகுதிக்கு இடையே இந்த போக்குவரத்து தொடங்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

அதிருப்தியில் பயணிகள்:
மேலும், ரூபாய் 10 முதல் ரூபாய் 40 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

10 ஆயிரம் பேர் மட்டுமே பயணம்:
தற்போதைய நிலையில் மெட்ரோ ரயிலில் தினமும் 10 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். இதன் மூலம் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு தினமும் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வருமானம் கிடைக்கிறது. விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர். எனவே, அன்றைய நாட்களில் 7 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.

20 சதவீத கட்டண சலுகை:
இதுவரைக்கும் மெட்ரோ ரயில் இயக்கத்தின் மூலம் சுமார் ரூபாய் 4.5 கோடி அளவிலேயே வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிலையில், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 20 சதவீத கட்டண சலுகையை வழங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அட்டை வாங்குபவர்களுக்கு மட்டும்:
அதாவது, டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்களுக்கு இந்த கட்டண சலுகை பொருந்தாது. மாறாக, பயண அட்டை வாங்குபவர்களுக்கே இந்த சலுகை பொருந்தும். இந்த பயண முறைக்கான அட்டை 3 வகையாக வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் கட்டண சலுகை பெற முடியும்.

செல்லும் நாட்கள்:
12 முறை, 50 முறை, 100 முறை என்று தொடர் பயண முறைகளுக்கான கட்டணம் அட்டையில் பதிவேற்றம் செய்யப்படும். இதில், 12 பயண முறைகளுக்கான அட்டை 7 நாட்களுக்கும், 50 பயண முறைகளுக்கான அட்டை 30 நாட்களுக்கும், 100 பயண முறைகளுக்கான அட்டை 60 நாட்களுக்கும் செல்லும் திறன் கொண்டது.

கால அளவும் சேரும்:
இந்த பயண சலுகை அட்டையை பெற, திரும்ப பெறத்தக்க முன்பணம் ரூபாய் 50 செலுத்த வேண்டும். ஒரு பயண முறை என்பது, பயணிகள் பயணம் தொடங்கும் இடத்தில் இருந்து இறங்கும் இடம் வரையுள்ள வழிப்பயணமாகும். இந்த பயண அட்டையில் மீண்டும் பணம் பதிவேற்றம் செய்யப்படும்போது, ஏற்கனவே மீதியிருக்கும் தொகையும், கால அளவும் சேர்த்துக்கொள்ளப்படும்.

திருப்பிக் கொடுத்தால் பெற முடியாது:
பயண அட்டையை திருப்பிக் கொடுத்தால், எஞ்சியுள்ள பயண முறைகளுக்கான தொகையையும், முன் பணத்தையும் பயணிகள் திரும்ப பெற முடியும்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications