மீண்டும் செஞ்சுரி போட்டது மேட்டூர் அணை.. 100 அடியை தொட்டது.. காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு!
காவிரியில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணை இன்று அதிகாலை 100 அடியை எட்டியது.
Recommended Video

பெங்களூர்: காவிரியில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணை இன்று அதிகாலை 100 அடியை எட்டியது.
கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

எப்படி
கர்நாடகாவில் பெய்துவரும் கடுமையான மழை காரணமாக காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து காவிரியில் அதிக அளவு நீர் திறந்து விடப்பட்ட வண்ணம் இருக்கிறது.

என்ன நீர் வரத்து
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 2 10,000 கன அடியாக அதிகரித்தது. அதன்பின் நேற்று இரவு வினாடிக்கு 2,35,000 கன அடியிலிருந்து 2,40,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

என்ன மட்டம்
இதனால் இன்று அதிகாலை அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர் இருப்பு 64.87 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இன்று திறப்பு
கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால், காவிரியில் இன்னும் அதிக அளவில் தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று திறக்கப்படுகிறது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications