தொடரும் மழை... மேட்டூர் அணை 100 அடியை நெருங்குகிறது
சேலம்: தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
இன்னும் ஓரிரு நாளில் மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கன மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதற்கேற்ப தற்போது தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மெதுவாக அதிகரித்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் கிட்டத்தட்ட 94 அடியாக உள்ளது. மொத்தக் கொள்ளளவு 120 அடியாகும். மழை தொடர்ந்தால் இன்னும் ஓரிரு நாளில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று தெரிகிறது.
தற்போது அணைக்கு விநாடிக்கு 11,000 கன அடி நீர் வரை வந்து கொண்டுள்ளது. பாசனத்திற்கு நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அணை விரைவில் 100 அடியைத் தொடும் என்று அதிகாரிகள் நம்பிக்கையில் உள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications