ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான்.. தீபா அதிரடி!
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான் என்று கூறியுள்ள தீபா, எம்ஜிஆர் - அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று தனது புதிய அமைப்பை அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் - அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கியுள்ள அவர் அதற்ன கொடியை அறிமுகம் செய்தார். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தான்தான் என்றும் தீபா தெரிவித்துள்ளார்.

சென்னை தி. நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தன்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டேன் என்று கூறினார். எனது அரசியல் பயணம் இன்று முதல் தொடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை தொடர்வேன் என்று கூறிய தீபா, தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்றார். தமிழக மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வேன் என்று கூறிய தீபா, நிலையான ஆட்சியையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் உருவாக்குவோம் என்றும் கூறினார்.
துரோகத்தின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம் என்று கூறியா தீபா, அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்றும் தெரிவித்தார். அதிமுக தொண்டர்களுடன் போராடி இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று கூறினார்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications