தங்க நகைக்காக அழகு நிலைய பெண் கழுத்தறுத்து கொலை: போலீஸ் விசாரணை

செங்குன்றத்தை அடுத்த பவனிநகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவர் செங்குன்றம் காமராஜர் நகரில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் மாலினி (32). இவர்களுக்கு பிரமோத் (7) என்ற மகனும், பவித்ரா (5) என்ற மகளும் உள்ளனர்.
மாலினி புழல் சிறை எதிரே உள்ள காந்தி தெருவில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். தினமும் காலை 9 மணிக்கு அழகு நிலையத்தை திறந்தால் இரவு 9 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு செல்வார். அதோடு மணப்பெண் அலங்கார ஆர்டர் பெற்று செய்து வந்தார்.
வியாழக்கிழமையன்று மாலினி ஒரு திருமண ஆர்டர் பெற்று இருந்தார். ஆர்டர் கொடுத்தவர் மாலை 6 மணி அளவில் மாலினியை அழைக்க கடைக்கு வந்தார். அங்கு மாலினி தரையில் விழுந்து கிடந்தார். மயங்கி கிடப்பதாக கருதிய அவர் பக்கத்து கடைக்காரரிடம் தகவல் சொன்னார்.
அவர்கள் வந்து பார்த்த போதுதான் மாலினி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவர் அணிந்து இருந்த தாலி செயின், வளையல், நகைகள் கொள்ளை போய் இருந்தது.
தகவல் கிடைத்ததும் புழல் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் மாலினிக்கு தெரிந்த நபரே இந்த கொலையை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கொலையாளிகள் நகையை மட்டும்தான் அபகரித்து சென்றுள்ளனர். வேறு எந்த பொருளும் திருடப்பட வில்லை. எனவே கொலையை திசை திருப்புவதற்காக அவன் நகையை கொள்ளையடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மாலினி கடந்த 5 வருடமாக அங்கு அழகுநிலையம் நடத்தி வருகிறார். பெண்கள் அழகு நிலையம் என்பதால் ஆண்கள் யாரும் அங்கு வருவதில்லை. ஆண்கள் யாராவது கடைவாசலில் நின்றால் கூட மாலினி சத்தம் போடுவாராம். அப்படியிருக்க அன்னியர் யாராவது கடைக்குள் புகுந்தால் மாலினி கூச்சல் போட்டு இருப்பார். இதனால் நன்கு அறிமுகமான ஒருவர் தான் இந்த கொலையை செய்து இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாலினியின் கணவர் நண்பர் திருமண விழாவில் பங்கேற்க மானாமதுரை சென்று உள்ளார். மனைவி கொலை செய்யப்பட்டு இருப்பது அவருக்கு தெரி விக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னைக்கு விரைந்து வந்தார்.
இதற்கிடையே அழகு நிலையத்தில் இருந்த மாலினி செல்போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். கொலைக்கு முன்பாக கணவரை தவிர வேறு ஒரு நம்பரில் மாலினி 3 முறை பேசியுள்ளார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications