போதை பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் ...அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வார்னிங்
சென்னை: போதைப்பொருள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும். விற்பனை செய்பவர் மற்றும் அதை வாங்குவர் மீது குண்டர் சட்டம் பாயும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். இனி அறிவிக்கப்படாத மின் வெட்டு இருக்காது. காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும். புகாரை பெறும் அதிகாரியுடன் சேர்த்து வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பூஜ்ஜிய ஊழல், ஜீரோ கமிஷன்
போதைப்பொருள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும். விற்பனை செய்பவர் மற்றும் அதை வாங்குவர் மீது குண்டர் சட்டம் பாயும். கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தவெகவினர் டெண்டர் எடுக்கக் கூடாது. தொகுதிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு முதல் பணியாக இருக்கும்.. கட்சி தொண்டர்கள் அரசு அதிகாரிகளை மிரட்டக் கூடாது. பூஜ்ஜிய ஊழல், Zero கமிஷனை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும். அறிவிக்கப்படாத மின் வெட்டு இனி இருக்காது. காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும். புகாரை பெறும் அதிகாரியுடன் சேர்த்து வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
முன்னாள் அமைச்சர்களை பழிவாங்க மாட்டோம்
வில்லிவாகக்த்தில் கல்லூரி இல்லை. வருவாய் துறையிடம் சொல்லி எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அதையெல்லாம் கொடுக்க சொல்லியிருக்கிறோம். விரைவில் கல்லூரி, உயர் நிலை பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தோல்வி விரக்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.
சிறப்பு மிக்க நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எங்களின் செயல்தான் பேசும். முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம்" இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications