நேரா நேரத்துக்கு சாப்பிட்டு நிம்மதியாக இருக்கும் அமைச்சர்கள்.. "அம்மா" இல்லாததால்!
சென்னை: வழக்கமாக அம்மாக்கள்தான் பிள்ளைகள் நேரா நேரத்துக்குச் சாப்பிட்டார்களா, இல்லையா, உடம்பைக் கவனித்துக் கொள்கிறார்களா என்று பார்த்துக் கொள்வார்கள். ஆனால் "அம்மா" முதல்வராக இருந்தவரை அவரது "பிள்ளைகள்" அதாவது அமைச்சர்கள் சரியான நேரத்துக்குச் சாப்பிட முடியாமல், நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டு வந்தனர். அதுகுறித்து "அம்மா"வும் கண்டு கொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது நேரா நேரத்துக்கு சரியான முறையில் சாப்பிடும் வாய்ப்பு அமைச்சர்களுக்குக் கிடைத்துள்ளதாம்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை அமைச்சர்களை விரல் நுனியில் வைத்திருந்தார் ஜெயலலிதா. அவர் என்ன கேட்பார், என்ன மாதிரி விசாரிப்பார் என்று தெரியாமல் எப்போதுமே ஒரு விதமான டென்ஷனில் இருப்பார்கள் அமைச்சர்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, அமைச்சர்களால் உட்காரக் கூட முடியாது. சரியான நேரத்தில் சாப்பிட முடியாது. ஜெயலலிதா அலுவலகத்திலிருந்து புறப்படுகிறார் என்றால் அவர் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அமைச்சர்களுக்குத் தகவல் போய் விடும்.
உடனே சீட்டை விட்டு எழுந்து கீழே ஓடி வந்து வரிசை கட்டி நிற்பார்கள். ஜெயலலிதா வந்து காரில் ஏறிச் செல்லும்போது கை கூப்பி, குணிந்து வணங்கி வழியனுப்பி விட்டுத்தான் திரும்புவார்கள். இதே கதை தான் அவர் வீட்டில் இருந்து கிளம்பி கோட்டைக்கு வரும்போதும். மக்களின் முதல்வரின் வண்டி போயஸ் கார்டன் கேட்டை தாண்டியவுடனேயே எல்லா அமைச்சர்களும் கோட்டை வாசலில் வரிசையாக நிற்க ஆரம்பித்துவிடுவர்.
அவர் அலுவலகத்தில் இருக்கும்போது எந்த அமைச்சரும் சாப்பிடக் கூட மாட்டார்களாம். மாறாக ஜெயலலிதா போன பின்னர்தான் சாப்பிடவே உட்காருவார்கள். சில நேரங்களில் மதிய உணவைத் தாண்டியும் கூட ஜெயலலிதா அலுவலகத்தில் இருப்பார். அப்போதெல்லாம் சாப்பிட முடியாமல் தவிப்பார்கள் அமைச்சர் பெருமக்கள்.
அமைச்சர்கள் பலருக்கு சர்க்கரை வியாதி உள்ளிட்டவை உள்ளன. ஆனாலும் சரியான நேரத்தில் சாப்பிட முடியாத நிலையில் தவித்து வந்தார்கள்.
தற்போது ஜெயலலிதா முதல்வராக இல்லாததால் பழைய மாதிரி கெடுபிடி, ஹரிபரி, பதட்டம் என்று எதுவும் இல்லை. எனவே அமைச்சர்கள் அனைவரும் காலா காலத்தில், நேரா நேரத்தில் சாப்பிட்டு நிம்மதியாக, அமைதியாக, ஹாயாக இருக்கிறார்களாம்.
எப்படியோ "அம்மா" வருவதற்குள் உடம்பை சரி செய்து கொண்டால் சரிதான்!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications