கருணாஸ் சட்டமன்ற உறுப்பினராக ஏன் நீடிக்க வேண்டும்?- அமைச்சர் ஜெயக்குமார்
Recommended Video

சென்னை: கருணாஸ் சட்டமன்ற உறுப்பினராக ஏன் நீடிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும். அந்த சட்டம் என்ன சொல்கிறது. பொதுவாக எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் என யாராக இருந்தாலும் பதவியேற்கும் போது ஒரு ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவனாகத்தான் நான் இருப்பேன் என்று ஏற்கிறோம்.

கேள்விக்குறி
அதை அவர் கடைப்பிடிக்கவில்லை. எனவே இந்த போக்கு போகும் போது அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதே கேள்விக்குறிதான் என்பது இப்போது வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சட்ட வல்லுனர்கள் எல்லாம் என்ன கேட்கிறார்கள் என்றால், கருணாஸ் ஏன் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க வேண்டும்?

கடமை செய்யும்
பால் தாக்கரேவும் இது போன்ற ஒரு கருத்தை சொன்ன போது உச்சநீதிமன்றம் தெளிவாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அவரால் வாக்களிக்ககூட முடியாத நிலை இருந்தது. ஜாதி ரீதியாக பேசுவோருக்கு இது போன்ற நடவடிக்கை எடுத்தால்தான் வாயை மூடிக் கொண்டு சட்டமன்ற உறுப்பினருக்கான கடமையை அவர்கள் ஆற்றுவார்கள்.

கருணாஸின் பதவி
இல்லாவிட்டால் எது வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் பேசலாம். சட்டம்- ஒழுங்கு இல்லை, என்னை கேட்பதற்கு யாரும் இல்லை, என்னை கட்டுப்படுத்துவதற்கு யாரும் இல்லை என்கிற நிலையில் இருந்தால் அது நாடு நாடாக இருக்காது. பால் தாக்கரேவுடன் ஒப்பிட்டு பார்க்கையில் கருணாஸின் பதவியும் பறிக்கப்படலாம் என்ற கருத்துதான் வேகமாக பரவி கொண்டிருக்கிறது.

வேண்டியதாயிற்று
கருணாஸை கைது செய்ய வேண்டும் என சில சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே ஒவ்வொரு ஜாதியினரும் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிடும். அதனால்தான் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டியதாயிற்று என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications