அமமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை... சிதறிவிடும் - அமைச்சர் ஜெயக்குமார்
டிடிவி தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் நெல்லிக்காய் மூட்டை போன்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: நாஞ்சில் சம்பத் போல டிடிவி தினகரனிடம் இருந்து அனைவரும் விலகி செல்வார்கள் எனவும் அவர் விரைவில் தனிமரமாவார் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அமமுக நெல்லிக்காய் மூட்டை போன்றது மூட்டை அவிழ்க்கப்பட்டால் சிதறிவிடுவார்கள். அப்போது தினகரன் தனியாகத்தான் நிற்க வேண்டியிருக்கும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் கே சி பழனிச்சாமி நீக்கம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், கட்சியின் கொள்கை முடிவுகளை தனி நபர் எடுக்க முடியாது என்றார்.

நீக்கப்பட்டது ஏன்?
கட்சி கொள்கையின் விதிமுறைகளை மீறி பேசியதால் கே.சி. பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஆட்சி வேறு, கொள்கை விவரங்கள் வேறு என்பதை அறியாததால் அதிமுகவில் இருந்து கே.சி. பழனிசாமி நீக்கப்பட்டார் என்று கூறினார்.

முடிச்சி போட வேண்டாம்
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் காவிரி விவகாரத்தையும் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் முடிச்சுப்போடக்கூடாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வெளியேறுவார்கள்
டிடிவி தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஒரு நெல்லிக்காய் மூட்டை போன்றது. மூட்டையை அவிழ்த்தால் அனைத்தும் சிதறிவிடும். அதுபோலத்தான் இப்போது நாஞ்சில் சம்பத் இப்போது வெளியேறியுள்ளார்.

தனிமரமாவார் தினகரன்
இப்போது டிடிவி தினகரனிடம் நிறைய பேர் இருப்பதாகத்தான் தோன்றும். நெல்லிக்காட்டை மூட்டை போல அனைவரும் சிதறி வெளியேறிய பின்னர் தனிமரமாகிவிடுவார் தினகரன் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications