டி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஊழல்... திமுகவை உள்ளுக்குள் இழுக்கும் அமைச்சர்
சென்னை: அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பணி நியமனங்கள் பற்றி சிபிஐ விசாரணை தேவை என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த தேர்வு முறைகேடுகள் பற்றிய பல தகவல்கள் வெளியே வரும் என்றும், அதில் தொடர்புடைய பலரும் விரைவில் சிறைக்கு செல்வார்கள் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது அதிமுக அரசாங்கத்தில் நடைபெற்ற போஸ்டிங்ஸ் பற்றி திமுக சிபிஐ விசாரணை கோரியுள்ளதால், அதற்கு கடிவாளம் போடும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் இதை கூறியுள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருந்துகொண்டு எங்களை குறை கூற திமுகவுக்கு என்ன தகுதி என்றெல்லாம் கூட ஆவேசம் காட்டியுள்ளார்.

வழக்கமாக அமைச்சர் ஜெயக்குமாரை பொறுத்தவரை செய்தியாளர்கள் சந்திப்பில் கூலாக, சிரித்தவாரே நகைச்சுவை ததும்ப பல விவகாரங்களை பேசுவார். ஆனால், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பணி நியமனம் தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்கும் அளவுக்கு திமுக சென்றுவிட்டதால் இன்று சற்று கொதிப்பாகவே திமுக மீது பாய்ந்தார். திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தை இந்த விவகாரத்தில் இழுத்துவிடும் வகையில், அவர்கள் எழுதிய கடிதங்கள் கைப்பற்றப்பட்டு அது குறித்த வழக்கு உள்ளதாக தெரிவித்தார்.
அதாவது இனியும் தேர்வு முறைகேடு தொடர்பாக அரசை சீண்டினால் பழைய விவகாரங்கள் கிளறப்படும் என்பதை சிம்பாலிக்காக கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். ஏற்கனவே திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவுக்கும் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய இடைதரகர் ஐயப்பனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி பரபரப்பை பற்ற வைத்திருந்தார் அமைச்சர் ஜெயக்குமார். இப்போது, திமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரை இந்த விவகாரத்தில் இழுத்து விடும் வகையில் பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத் தேர்வுகளில் இனி எந்தக் காலத்திலும் முறைகேடு செய்ய முடியாத வகையில் கடுமையான சில நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications