திமுக அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்கவில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!
திமுக அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்கவில்லை என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு, அதிமுக சார்பில் யாருக்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதில் திமுக அரசியல் பண்பாட்டைக் கடைபிடிக்கவில்லை என்றும் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது. "அரசியல் ஆளுமை கலைஞர்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தலைவர்கள் கருணாநிதியின் அரசியல் திறமை, ஆளுமையை பற்றி சிறப்பாக எடுத்துக் கூறினர்.

பாரத ரத்னா
கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக எல்லா தலைவர்களும் வலியுறுத்திய முக்கிய கோரிக்கை... கருணாநிதிக்கு பாரதரத்னா வழங்கப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த கூட்டத்தில் அதிமுக தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. காரணம், இந்த கூட்டம் சம்பந்தமாக அதிமுகவுக்கு திமுக அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அமைச்சர் ஜெயக்குமார்
இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை விமான நிலையத்தில் சந்தித்து பேசினார். அப்போது, கருணாநிதி அஞ்சலி கூட்டம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஜெயக்குமார், "கருணாநிதி இறந்தபோது, முதலமைச்சர் கருணாநிதி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். உடல் நல்லடக்கத்திலும் அரசு சார்பாக நான் சென்று அஞ்சலி செலுத்தினேன்.

அரசியல் பண்பாடு
இப்படி, கருணாநிதி மறைவின்போது, தமிழக அரசு உரிய மரியாதை வழங்கி அரசியல் பண்பாட்டுடன் நடந்து கொண்டது. ஆனால் திமுக அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்கவில்லை. அரசியல் பண்பாடு பேணி காக்கப்பட்டு, அவை கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதனை நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் திமுக கடைப்பிடிக்கவில்லை" இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

பொறுத்திருந்து பார்ப்போம்
நேற்று நடைபெற்ற அஞ்சலி கூட்டத்திற்கு அதிமுகவுக்கு ஏன் அழைக்கப்படவில்லை என்பது தெரியவில்லை. ஒருவேளை அழைப்பு விடுத்திருந்தால் அதிமுக தரப்பில் யாராவது வந்திருப்பார்களா என்றும் தெரியாது. எனினும், வரும் 30 ஆம் தேதி அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ளும் கருணாநிதியின் இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அதிமுக, திமுகவின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications