கமல் ட்ரம்ப்பை கூட சந்திக்கட்டும் எங்களுக்கு கவலையில்லை... ஜெயக்குமார் சீண்டல்!
நடிகர் கமல்ஹாசன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தாலும் கவலை இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : நடிகர் கமல்ஹாசன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது : நடிகர் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பது குறித்து என்னிடம் கேட்கிறீர்கள், அவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தாலும் சரி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையே சந்தித்தாலும் சரி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

இதே நாளில் கடந்த ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற கடைசி விழாவை எங்களால் மறக்க முடியாது. ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் விசாரணையில் இருந்து தப்ப முடியாது. முதல்வர் பழனிசாமி கங்கையில் குளித்ததால் நதி பாவமடைந்துவிட்டதாக தினகரன் சொல்கிறார் ஆனால் பாவத்தின் மொத்த உருவமே தினகரன்தான் என்றார்.
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிடும் கருத்துகள் அனைத்திற்கும் தொடர்ந்து விமர்சனத்தை முன் வைத்து வருபவர் ஜெயக்குமார். இன்றை சந்திப்பு நிகழ்ச்சியையும் அவ்வாறே விமர்சித்துள்ளார். ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்ட போது, ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கே அவர் தான் காரணம் என்று சொல்வார் என்று கூறியிருந்தார் அமைச்சர் ஜெயக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications