சைபர் சைக்கோக்கள் எஸ்வி சேகர், எச் ராஜாவால் தமிழகத்துக்கு ஆபத்து- அமைச்சர் ஜெயக்குமார் 'பொளேர்'
பத்திரிகையாளருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்த எஸ் வி சேகர் மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: சைபர் சைக்கோக்களான எச். ராஜா, எஸ்.வி.சேகரால் தமிழகத்துக்கு ஆபத்து; இருவர் மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் செய்தியாளர் லட்சுமியின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அந்த பெண் பத்திரிகையாளரிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்டார். எனினும் மன்னிப்பை ஏற்றபோதிலும் அந்த நிருபர் லட்சுமி அதற்காக அவர் கூறிய காரணத்தை ஏற்க மறுத்துவிட்டார்.

கண்டனம்
இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த எச். ராஜா, எஸ்.வி சேகர் உள்ளிட்டோர் மிக கீழ்த்தரமான வகையில் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு கடும் கண்டனம் கிளம்பியதை தொடர்ந்து அவற்றை இருவரும் நீக்கிவிட்டனர்.

புகார்
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் எஸ்வி சேகர் மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை. அவதூறு கருத்து தெரிவித்தவர்கள் மீது பத்திரிகையாளர்கள் புகார் தர வேண்டும்.

அவதூறு பேச்சு
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவதூறாக பேசும் எச். ராஜா மீது அரசு வழக்கு தொடரும். தமிழக அரசு யாருக்கும் வக்காலத்து வாங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனுமதிக்க முடியாது
எஸ்.வி. சேகர், எச். ராஜா இழிவாக பேசுவதை ஏற்க முடியாது. இந்த இரண்டு சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து; பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்றார் ஜெயக்குமார். இதனிடையே எஸ்வி சேகருக்கு எதிராக இன்று பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications